»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கிள் டான்ஸ் ஆடும் ஹீரோயின்கள் வரிசையில், தொப்பை புகழ் ஜோதிகாவும் சேர்ந்து விட்டார்.

"யூத்" படத்தில் "ஆல்தோட்ட பூபதி நானடா..." பாடலுக்கு விஜய்யுடன் டான்ஸ் ஆடினார் சிம்ரன்.அதைத் தொடர்ந்து அரசு படத்தில் கிரணும் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினார்.

முன்பு "ரிதம்" படத்தில் ரம்யா கிருஷ்ணன் "அய்யோ பத்திகிச்சு..." என்று ஒரு பாட்டுக்கு ஆடினார்.அதேபோல விஜய்யுடன் "சரக்கு வச்சிருக்கேன், எறக்கி வச்சுருக்கேன்..." என்ற பாடலுக்கு ஆடிபட்டையைக் கிளப்பினார் மீனா.

இந்த ஹீரோயின்கள் வரிசையில் சேர வந்திருக்கிறார் ஜோதிகா. ஷங்கர் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் பாய்ஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட புக் செய்யப்பட்டுள்ளார் ஜோதிகா. பாய்ஸ்படத்தை சுமார் 2 வருடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைக்கு சூர்யாவுடன் நடித்து வரும் காக்க..காக்க.. மற்றும் ரம்பாவின் த்ரீ ரோஸஸ் தவிரஜோதிகா வசம் கையில் படங்கள் ஏதும் இல்லை. ரூ. 50 லட்சம் வரை வாங்கிய ஜோதிகா தனதுரேட்டை ஏகத்துக்கும் குறைத்துப் பார்த்தார்.

இப்போது ரூ. 10 லட்சம் போதும் என்ற நிலைக்குவந்துள்ளார். ஆனாலும் பலனில்லை. தெலுங்கில் இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.மலையாளத்துப் பக்கம் முயன்றதில் சில படங்கள் தேறின. ஆனால், காசு ரொம்ப ரொம்ப கம்பி.

இதனால் கன்னடத்தின் பக்கம் போனார். அங்கு அட்ரஸே இல்லாத முகங்கள் தான் ஹீரோக்களாகநடித்து வருகின்றன. அந்தக் கும்பலுடன் சேர்ந்து சில படங்களில் நடித்தார். இப்போது அங்கும்சான்ஸ் இல்லை.

இந் நிலையில் ஷங்கரின் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட கூப்பிட்டுள்ளார்கள். குடுக்குறதைக்குடுங்கள் என்று சொல்லி சம்மதித்துவிட்டார் ஜோதிகா. ஆனால், ஓவர் பிரம்மாண்டம் என்றுசொல்லி தயாரிப்பாளர்களை மொட்டை அடித்தவர் ஓவர் உலக அறிவாளி ஷங்கர். இதனால் படம்ஓடியும் நஷ்டத்தைத் தான் பார்த்தனர் தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும்.

இதனால் பாய்ஸ் படத்தில் காசு போட யாரும் முன்வரவில்லை. சொந்தக் காசு என்பதால் வெறும் புதுமுகங்களை(ரொம்ப விவரம்) மட்டும் வைத்து பாய்ஸ் படத்தை எடுத்து வருகிறார். இப்போது ரேட் குறைந்துவிட்டதால்ஜோதிகாவையும் இழுத்துப் போட்டுள்ளார்.

கலக்கும்"லவ்ஸ்"

லவ்ஸ் என்று ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறு. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் ரம்பா ஒருபாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடுகிறார். அதுவும் படு கவர்ச்சி ஆட்டமாம். ஏற்கனவே, காதலர் தினம் படத்தில் இவர்ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

லவ்ஸ் படத்தின் ஹீரோவின் பெயர் தமிழ் (நெசமாலுமே அது தாங்கோ). இவர் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர்.படத்தில் இவருக்கு இரு ஜோடிகள். தெலுங்கில் ஹீரோயினாக நடித்து வரும் சோனா. கன்னடத்தில் ஹீரோயினாகநடித்து வரும் ஸ்வீட்டி ஆகிய இருவரும் தான் அந்த ஜோடிகள்.

புதிய வில்லனாக தேவா என்பவர் அறிமுகமாகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil