»   »  சுனாமி: கதறியழுத ஜோதிகா

சுனாமி: கதறியழுத ஜோதிகா

Subscribe to Oneindia Tamil

சுனாமியால் தாக்கப்பட்டு வீடிழந்து தவிக்கும் மக்களை நேரில் சந்தித்து உதவிகள் வழங்கினார் நடிகை ஜோதிகா.

சென்னையில் பாதிக்கப்பட்ட தங்கியிருக்கும் பார்த்தசாரதி கோவிலுக்கு வந்த ஜோதிகா அங்கு தஞ்சம் புகுந்துள்ள மீனவர்களின்குடும்பத்தினருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.

அவரைப் பார்த்தவுடன் குழந்தைகள், உடமைகளை இழந்த சில பெண்கள் அழ ஆரம்பித்துவிட, ஜோதிகாவும் கண்ணீரை அடக்க முடியாமல்கதறி அழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் தன்னைத் தேற்றிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மிகவும் டைட்டான சந்திரமுகி மற்றும் மாயாவி சூட்டிங்குக்கு இடையிலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வந்த ஜோதிகா, நீண்டநேரத்தை அந்த மக்களிடையே கழித்தார்.

பின்னர் அங்கிருந்த சிறுமிகளுடன் தனியே நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவரை அக்கா என்று அழைத்து சிறுமிகள் மிகவும்நெருக்கமாகிவிட, அச் சிறுமிகளுக்கு புதிய உடைகளையும் உடனே வரவழைத்துக் கொடுத்தார்.

மனம் விட்டு ஆறுதல் சொன்ன ஜோதிகா, அங்கிருந்து கண்களில் நீருடனேயே புறப்பட்டுச் சென்றார்.

விஜயா வங்கி ரூ. 1 கோடி:

இதற்கிடையே சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக பெங்களூரைத்தலைமையகமாகக் கொண்ட விஜயா வங்கி அறிவித்துள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil