»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஜோதிகாவுக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை.

அருள் படத்தின்போது விக்ரமுடன் நெருங்கிவிட்டதாக இருவரையும் முடிச்சு போட்டு கிசுகிசுவெளியானதால் சூர்யாவும், ஜோதிகாவும் படு மூட் அவுட். அதிலிருந்து மீண்டு இருவரும் சகஜ நிலைக்குவந்தபோது ஜோதிகாவுக்கு டைபாய்ட் காய்ச்சல்.

கண்டிப்பாக பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டதால், 15 நாட்களுக்குபடப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மும்பையில் இருக்கும் தன் அம்மாவிடம் போய்விட்டார் ஜோதிகா.

இந் நிலையில் புதிய பிரச்சனை. ஒப்புக் கொண்ட படத்தில் நடிக்காமல் ஏமாற்றியதாகக் கூறிஜோதிகாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் நடிக்க கே.பி.பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவிருந்த நண்பாநண்பா என்ற படத்தில் நடிக்க ஜோதிகா புக் செய்யப்பட்டார். இதற்காக அட்வான்சும் வாங்கிக் கொண்டுநடித்தார். அர்ஜூன் செய்த கால்ஷீட் சொதப்பலால் படம் பாதியிலேயே படுத்து விட்டது.

இதைத் தொடர்ந்து வேறு படங்களில் ஜோதிகா பிஸியாகி விட்டார். இந் நிலையில் அர்ஜூனின்வற்புறுத்தல் காரணமாக படம் தூசி தட்டப்பட்டு மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்தது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளுமாறு ஜோதிகாவுக்கு அழைப்பு சென்றது.

ஆனால் அடுத்த 2 மாதங்களுக்கு தான் பிஸியாக இருப்பதால் அதை முடித்து விட்டுத்தான் வர முடியும்என்று ஜோதிகா கூறி விட்டார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் தயாரிப்பாளர்பாலு. இதுதொடர்பாக விசாரிக்க ஜோதிகாவை அழைத்தது தயாரிப்பாளர் சங்கம். ஆனால் அவர்வரவில்லை.

இதனால் ஜோதிகா புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இப்போதுமும்பையில் இருந்தபடியே சென்னை தயாரிப்பாளர்கள் சங்க புள்ளிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு தடையை நீக்கும்படி தாஜா செய்து வருகிறார் ஜோதிகா.

பி.கு: ஜோதிகாவின் சம்பளம் இப்போதைய நிலவரப்படி ரூ. 40 லட்சமாம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil