விஜய்யும் திரிஷாவும் ஒரே வீட்டில் இருக்காங்களா? பெட்ரூமில் உங்களுக்கு என்ன வேலை?.. விளாசிய பிரபலம்
சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ரொம்பவே ஃபேவரைட். இரண்டு பேரும் சேர்ந்து ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். கோட் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடியிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்துவைத்து ஒருதரப்பினர் கிசுகிசு பரப்பிவருகின்றனர். இந்நிலையில் பிரபல பத்திரிகியாளர் செய்யாறு பாலு காட்டமாக பேசியிருக்கிறார்.
ஜோடி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிறகு ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. தொடர்ந்து பலருடன் நடிக்க ஆரம்பித்த அவர்; விஜய்யுடன் கில்லி திரைப்படத்தில் முதன்முறையாக சேர்ந்து நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. மேலும் ஆன் கேமராவில் அவர்களது கெமிஸ்ட்ரியும் நன்றாக இருந்தது. இதனால் அந்த ஜோடியை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள். தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட மொழிகளில் சேர்ந்து நடித்தார்கள்.
பல வருடங்கள்: அவர்கள் தொடர்ந்து நடித்ததை வைத்து இரண்டு பேரையும் சேர்த்து திரைத்துறையில் கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள். இதனால்தான் இடையில் அவர்கள் சேர்ந்து நடிப்பதை நிறுத்தியிருந்தார்கள் என்ற பேச்சும் உண்டு. சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தார்கள். படம் ஃப்ளாப் ஆனாலும் விஜய் - திரிஷா ஜோடி வழக்கம்போல் கொண்டாடப்பட்டது.

மீண்டும் கிசுகிசு: அந்த ஜோடி கொண்டாடப்பட்டாலும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்களை இணைத்து கிசுகிசுக்க ஆரம்பிக்கப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளுக்கு லிஃப்ட்டில் அவருடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து திரிஷா வாழ்த்து தெரிவித்தார். அதை வைத்து பலரும் பல விதமாக பேச ஆரம்பித்தார்கள். மேலும் இரண்டு பேரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள்; விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிவதற்கே இதுதான் காரணம் என்று இஷ்டத்துக்கு பேசினார்கள்.
திருமண வதந்தி: விஜய்யுடன் சேர்த்து வைத்து கிசுகிசுத்தது மட்டுமின்றி கடந்த சில நாட்களாகவே திரிஷாவுக்கும் துருக்கி தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று பேசப்பட்டது. இதனை பார்த்து காண்டான திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஹனிமூனையும் பிளான் செய்துகொடுங்களேன்' என்று கோபமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறார்.
செய்யாறு பாலுவின் பேட்டி: அவர் பேசுகையில், "40 வயதுக்கு மேலும் ஒரு பெண் திரைத்துறையில் இருக்கிறார். இது சாதாரண விஷயமில்லை. ஆனால் அவரை பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவுகின்றன. முக்கியமாக விஜய்யும், திரிஷாவும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள் என இஷ்டத்துக்கு பேசிவருகிறார்கள். அது உண்மை என்பதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா?
பெட் ரூமை ஏன் எட்டி பார்க்கிறீர்கள்: அதேபோல் விஜய் ஆரம்பித்திருக்கும் கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் திரிஷாதான். அவரது பெயர் போட்டு லெட்டர் பேட் ரெடியாகிவிட்டது. தேர்தல் நேரத்தில் வருவார் என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் தேவையில்லாத வேலை. விஜய், திரிஷா விஷயம் அவர்களது பெர்சனல் . கமல் சொன்னது மாதிரிதான், அவர்கள் பெட் ரூமை ஏன் நீங்கள் எட்டி பார்க்கிறீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











