»   »  'கவர்ச்சி ஜூவாலை'யை திரையில் பரப்ப வருகிறார் ஜூவாலா கட்டா

'கவர்ச்சி ஜூவாலை'யை திரையில் பரப்ப வருகிறார் ஜூவாலா கட்டா

By Sudha
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் நடிக்க அந்தக் காலத்தில் தவமாய் தவமிரு்பபார்கள். பக்கம் பக்கமாக வசனம் பேசிப் பார்ப்பார்கள், நடித்துப் பார்ப்பார்கள், அழகாக இருக்க முயற்சிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் எல்லாமே தலைகீழ்தான்..

ஹீரோவாக வேண்டுமா, டஸ்ட்டியாக, டல்லாக, மெல்லிசாக இருந்தால் போதும். பரட்டையாக தலை இருந்தால், கூடவே தாடி இருந்தால் அது எக்ஸ்டிரா தகுதிகள். ஹீரோயினாக வேண்டுமா, கவர்ச்சியாக, அழகாக இருந்தால் போதும், பேசக் கூட வேண்டாம், வாயை மட்டும் அப்படி இப்படி அசைத்தால் போதும்- ஆனால் குத்துப் பாட்டுக்குக் கண்டிப்பாக ஆடத் தெரிந்திருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் விளையாட்டு உலகைச் சேர்ந்த கவர்ச்சிகரமான வீராங்கனைகளை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று பலரும் முரட்டுத்தனமாக முயன்று வருகின்றனர்.

இருப்பினும் பல வீராங்கனைகள் நடிப்பதற்கு விருப்பமில்லை என்று விலகி வருகிறார்கள். ஆனால் பேட்மிண்ட்டன் ஆட்டத்தில் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் கலக்கியவரான ஜுவாலா கட்டாவை சினிமாவுக்கு இழுத்தே விட்டார்கள்.

இந்திய - சீனக் கூட்டுத் தயாரிப்பு

இந்திய - சீனக் கூட்டுத் தயாரிப்பு

இந்திய, சீனத் தாய் தந்தைக்குப் பிறந்தவர்தான் ஜூவாலா. ஆந்திரத்தில் வசித்து வருகிறார். பேட்மிண்ட்டன் புயல். இரட்டையர் போட்டியில் கலக்கியவர். ஒற்றையர் பிரிவில் கலக்கத் துடித்து வருபவர்.

அசாருதீனுடன் இணைத்து ஒரு வதந்தி

அசாருதீனுடன் இணைத்து ஒரு வதந்தி

முன்பு இவரை அசாருதீனுடன் இணைத்து செய்திகள் கிளம்பின. பின்னர் அசாருதீன் மகனுடன் இணைத்தும் வதந்திகள் வந்தன.பின்னர் அத்தனையும் அடங்கிப் போயின.

திறமையும், அழகும் ஒரு சேர..

திறமையும், அழகும் ஒரு சேர..

ஜூவாலா கட்டா நல்ல திறமையான ஒரு வீராங்கனை. இந்தியாவுக்கு சர்வதேச அளவில் பல பெருமைகளைச் சேர்த்தவர். கூடவே நல்ல அழகும் நிரம்பியவர். இதனால்தான் அவரை சினிமாவுக்கு இழுக்கப் பார்த்தனர்.

ஜூவாலாவும் நடிக்க ரெடி

ஜூவாலாவும் நடிக்க ரெடி

தன்னைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருவதாகவும், நல்ல கதையாக அமைந்து விட்டால் நடித்து விடலாம் என்றுதானும் சினிமா ஜோதியில் ஐக்கியமாக ஆர்வமாக இருப்பதை வெளிப்படுத்தியிருந்தார் ஜுவாலா.

தெலுங்கில் அறிமுகமாகிறார்

தெலுங்கில் அறிமுகமாகிறார்

இந்த நிலையில் அவர் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார் ஜூவாலா. தெலுங்கில் ஒரு படத்தில் அவர் புக் ஆகியுள்ளாராம்.

குண்டே ஜாரி கல்லன்தயிண்டே... (அப்படீன்னா, இன்னாங்கோ அர்த்தம்?)

குண்டே ஜாரி கல்லன்தயிண்டே... (அப்படீன்னா, இன்னாங்கோ அர்த்தம்?)

இதுதான் ஜூவாலா நடிக்கப் போகும் தெலுங்குப் படத்தின் பெயர். ரெண்டு வாட்டி படிச்சுப் பார்த்தீங்கனா, வாயில் நன்றாக வரும்.

டான்ஸ் டான்ஸ் டான்ஸ்...

டான்ஸ் டான்ஸ் டான்ஸ்...

இப்படத்தில் ஜூவாலாவுக்கு ஒரு பாட்டுக்கு ஆட வைத்துள்ளனராம். அதாவது குத்தாட்டத்தில் குதித்துள்ளார் ஜூவாலா என்பதே இந்த 'மல்டி பேஜ்' ஸ்டோரியின் 'ஒன்லைன்' ஆகும்.

கூட ஆடுபவர் நிதின்

கூட ஆடுபவர் நிதின்

இந்தப் பாட்டுக்கு ஜூவாலாவுடன் இணைந்து நடித்துள்ளவர் நிதின். இவர் நடிகர் மட்டுமல்ல, ஜூவாலாவின் நெருங்கிய நண்பரும் கூடவாம். ஷூட்டிங்கில் ஜூவாலாவின் டென்ஷனைக் குறைக்கும் வேலைக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறாராம் நிதின்.

வித்தியாசமான அனுபவம்...

வித்தியாசமான அனுபவம்...

இந்தப் பாட்டு குறித்து நிதினும், தயாரிப்பாளரும் என்னிடம் சொன்னபோது ஒரு நொடி யோசித்தேன். இருப்பினும் பாடல் குறித்துக் கேட்டறிந்ததும் இதை விடக் கூடாது என்று விரும்பி ஏற்றேன் என்று கூறுகிறார் ஜூவாலா.

பெப்பி பாட்டு...

பெப்பி பாட்டு...

பாடல் குறித்து மேலும் ஜூவாலா விவரிக்கையில், இந்தப் பாடல் ரொம்ப பெப்பியானது, கேஷுவலானது. முதல் நாளில் பதட்டமாக இருந்தது. நிறையப் பேர் நான் ஆடியதைப் பார்த்ததால் கூச்சமாகக் கூட இருந்தது. இருப்பினும் பயிற்சியின் மூலம் கூல் ஆனேன் என்றார் ஜூவாலா.

சானியாவை இழுக்கப் பார்த்த சிம்பு

சானியாவை இழுக்கப் பார்த்த சிம்பு

விளையாட்டு வீராங்கனைகளை சினிமாவுக்கு இழுப்பது முதல் முறையல்ல. முன்பு இப்படித்தான் சானியா மிர்ஸாவை சினிமாவுக்கு இழுக்க சீரியஸாக முயன்றனர். சிம்பு கூட அந்தவரிசையில் இருந்தார். ஆனால் சானியா டேக்கா காட்டி விட்டுப் போய் விட்டார்.

விளம்பரத்திற்கு மட்டும் சாய்னா...

விளம்பரத்திற்கு மட்டும் சாய்னா...

அடுத்து பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேஹ்வாலையும் சினிமாவுக்கு இழுக்கப் பார்த்தனர். ஆனால் விளம்பரப் படங்கள் மட்டும் போதும் என்று அவர் டீசன்ட்டாக ஒதுங்கிக் கொண்டார்.

தீபிகாவும் வருவாரா...?

தீபிகாவும் வருவாரா...?

சென்னையைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலையும் சினி்மாவுக்கு இழுக்க கடும் முயற்சிகள் நடந்தன. அவரும் ஜூவாலாவைப் போல கவர்ச்சிகரமான அழகுடன் இருப்பவர்தான். ஆனால் தீபிகா சினிமா வாய்ப்புகளை ஏற்காமல் மறுத்து வருகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    After her exploits on badminton court, ace Indian shuttler Jwala Gutta is now making her foray into the tinsel town and she will be seen shaking a leg in a dance number for a Telugu film titled 'Gunde Jaari Gallanthayyinde (GJG)'. Known for her spirited performance on court, Jwala, who is the reigning Commonwealth Games gold medallist, is now shooting for a dance number in a film, which stars her good friend and actor Nithin.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more