»   »  மீண்டும் வருகிறார் ஜோ.?

மீண்டும் வருகிறார் ஜோ.?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோதிகா மீண்டும் நடிக்க விரும்பினால் நான் ஆட்சேபிக்க மாட்டேன் என்று சூர்யா கூறியுள்ளார்.

ஜோதிகாவைக் காதலித்து, சம்மதம் வரும் வரை காத்திருந்து, கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்து நினைத்ததை சாதித்த பூரிப்பில் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருபவர் சூர்யா.

தற்போது வேல் படப்பிடிப்பில் படு பிசியாக உள்ளார் சூர்யா. பிசியாக இருந்தபோதிலும் ஷூட்டிங் பிரேக்கில் செய்தியாளர்களைச் சந்தித்து ஜாலியாக பேசினார்.

உலகிலேயே அதிர்ஷ்டசாலியான நபர்களில் நானும் ஒருவன். நான் விரும்பிய பெண்ணே எனக்கு வாழ்க்கைத் துணையாகவும் வந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

எங்களது திருமணத்திற்குப் பிறகு எனது நண்பர்கள் பலரும், ஏன் ஜோதிகாவை தொடர்ந்து நடிக்க அனுமதிக்கவில்லை என்று கேட்கிறார்கள். உண்மையில் சினிமாவை விட்டு விடுமாறு நான் ஜோதிகாவிடம் கூறவில்லை. அது அவராகவே எடுத்த முடிவு.

அவர் மீது எந்த முடிவையும் நான் திணிப்பதில்லை. அவர் நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை நான் தடுக்க மாட்டேன், ஆட்சேபிக்க மாட்டேன் என்றார் சூர்யா.

சூர்யா, ஜோதிகா திருமண வரவேற்பின்போது, சூர்யாவின் தந்தை சிவக்குமார் கூறுகையில், கல்யாணத்திற்குப் பிறகு ஜோதிகா மீண்டும் நடிக்க மாட்டார் என்றார். சினிமாவில் போதுமான அளவுக்கு சாதித்து விட்டார் ஜோதிகா. இனிமேல் குடும்ப நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்வார் என்றும் சிவக்குமார் தெரிவித்தார்.

எனவே திருமணத்திற்குப் பின் ஜோதிகாவே விரும்பினாலும் கூட அவரால் நடிக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கின்றனர். எனவே ஜோதிகா நடிப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று சூர்யா கூறினாலும் கூட சிவக்குமார் சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

ஜோதிகா மீண்டும் நடிக்க வருவது சூர்யாவின் கையில் இல்லை, மாறாக சிவக்குமாரின் வாயில் உள்ளது!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil