»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோதிகா ரெடியாகி வருகிறாராம். எதுக்குன்னு தனியா செல்லனுமா? கல்யாணத்துக்குத்தான்!

காதலர் சூர்யாவின் வீட்டில் சிவக்குமாரும் அவரது மனைவியும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்துகொண்டுள்ளாராம். எனவே பூரிப்படைந்துள்ளனர் சூர்யாவும் ஜோவும்.

தமிழர் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் மிகவும் கறாரானவர் சிவக்குமார். இதனால் அவரின் பூரண ஆசியைப்பெற வேண்டுமானால் இந்த விஷயங்களில் எல்லாம் மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் எனஜோதிகாவிடம் கூறியிருக்கிறாராம் சூர்யா.

காதலரின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு சமைப்பது எப்படி, தமிழர் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மாதவனின் மனைவி சதாவிடம் கற்று வருகிறாராம் ஜோதிகா. சதாவின் மிக நெருங்கியதோழியாகி விட்ட ஜோ, அவரிடம் தான் மனம் விட்டு எல்லாவற்றையும் பேசுகிறாராம்.

மாதவனைக் காதலித்துக் கைப்பிடித்த சதாவும் ஜோதிகாவுக்கு நல்ல பிரண்டாக இருந்து வழி காட்டி வருகிறார்என்கிறார்கள்.

சிறு குழந்தையைக் கூட வாங்க.. போங்க.. என மரியாதை சொல்லிக் கூப்பிடும் கண்ணியத்துக்குச் சொந்தக்காரரானசிவக்குமார் தனது உறவினர்களுடன் மிக நெருக்கமானவர். சினிமாவில் எவ்வளவோ பிஸியாக இருந்தகாலத்திலும் சொந்த ஊர், சொந்தபந்தங்களை மிகவும் நேசித்தவர். அவர்களின் முழு மரியாதையைப் பெற்றவர்.

இதனால் வீட்டுக்காரர்கள் மட்டுமின்றி உறவினர்களிடமும் எப்படி மரியாதையாகப் பழகுவது என்பது பற்றியும்ஜோதிகாவுக்கு கிளாஸ் எடுக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் காக்க.. காக்கவில் இருவரும் கிட்டத்தட்ட ஆதர்ஷதம்பதிகளாகவே நடித்துக் காட்டியுள்ளனர் என்பது சைட்-லைட். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகிவிட்டதால்தயாரிப்பாளர் தாணுவை விடவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் இந்த இருவரும்.

பிதாமகன் ரிலீசுக்குப் பின் டும்..டும். சத்தம் கேட்கலாம் என்கிறார்கள்.

அஜீத்-ஷாலினி மாதிரி இதுவும் ரொம்ப நல்ல மேட்ச் என்கின்றனர் இந்த இருவரையுமே நன்றாக தெரிந்துவைத்துள்ளவர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil