»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

வாலியில் கெஸ்ட் ரோலில் வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஜோதிகா ஒருமுழு சுற்று முடித்துவிட்டார். முதல் ரவுண்டிலேயே கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, மாதவன்,விக்ரம் எனமுன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை வாங்கி தமிழ் ஹீரோயின்களிலேயே காஸ்ட்லியானவர் என்றபெயரையும் பிடித்தார்.

இப்போது அவருக்கு இறங்கு முகம். ரேட்டைக் குறைத்துப் பார்த்தும் பலன் இல்லை. இப்போது ரூ.15 லட்சம் போதும் என்கிறார். ஆனால், கூப்பிட ஆள் இல்லை.

இருப்பினும் தூள் படத்தில் அவரது ரோல் நன்கு பேசப்பட்டதால் மீண்டும் ஓரிரு வாய்ப்புகள்அவரைத் தேடி வந்தன. ஆனால், அவை டபுள் ஹீரோயின் ரோல்களாம்.

ஜோதிகாவுக்கு முக்கியத்துவம் ஏதும் இல்லாத ரோல்கள் என்பதால் அவற்றை ஒப்புக் கொள்ளவேண்டாம் என அவரது மனதைக் கொள்ளை கொண்ட நடிகர் சூர்யா தடுத்துவிட்டாராம்.

அதே போல சிங்கிள் டான்ஸ் என்று யாராவது கூப்பிட்டால் போனை என்னிடம் கொடு என்றுகூறியிருக்கிறாராம்.

இதனால் ஜோதிகா மலையாளக் கரைப் பக்கம் ஒதுங்கிவிட்டார். தமிழில் இப்போதைக்கு அவரது கையில் இருப்பதுரம்பா தயாாாாாாாா.......ரித்து வரும் த்ரிரோஸஸ் மட்டுமே.

ஆனால், மலையாளதுக்கு போன வேகத்திலேயே குறிப்பிடத்தக்க அளவிலான படங்களில் புக் ஆகியுள்ளாராம்ஜோதிகா. அங்கு இப்போது முன்னணியில் உள்ள நடிகர்களான திலீப், ஜெயராம் (மம்முட்டி, மோகன்லால் எல்லாம்ஏறக்கட்டியாச்சுங்கோவ்!) ஆகியோருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போதைக்கு தமிழ் பக்கம் வர மாட்டார் என்றே கோலிவுட்டில் கூறுகிறார்கள். தமிழைப் போல,மலையாளத்திலும் தனக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று பலமாக நம்புகிறார் ஜோ.

எங்கிருந்தாலும் வாழ்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil