»   »  ‘இப்டித் தான் குழந்தைகளை வளர்க்கோணும்’... ‘பொறுப்பான அம்மா’ ஜோ தரும் டிப்ஸ்

‘இப்டித் தான் குழந்தைகளை வளர்க்கோணும்’... ‘பொறுப்பான அம்மா’ ஜோ தரும் டிப்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகளை எளிமையாக, அதே சமயம் வாழ்க்கையின் எந்த உயரத்திற்கு சென்றாலும் பழசை மறக்காத குணத்துடன் வாழ்பவர்களாக வளர்க்க வேண்டும் என நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை ஜோதிகா கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பின் ‘36 வயதினிலே' படம் மூலம் தமிழில் மறுபிரவேசம் செய்துள்ளார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவிற்கு 8 வயதில் தியா என்ற பெண்ணும், 5 வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு குழந்தைகளை வளர்ப்பதிலேயே தன் கவனம் முழுவதையும் செலுத்தி வந்தார் பொறுப்பான அம்மாவான ஜோதிகா.

இந்நிலையில், குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது :-

ஆர்வக்கோளாறு...

ஆர்வக்கோளாறு...

குழந்தைகளை விட அம்மா, அப்பா ஆர்வக்கோளாறுல பண்ற தப்புக்கள் தான் அதிகம். நானும் குழந்தை பிறந்த புதுசுல அவங்க கேட்கிறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்திடணும்னு நினைச்சேன்.

அது தப்பு...

அது தப்பு...

ஆனா, அது தப்பு. எல்லாமே ஈஸியா கிடைச்சுட்டா எந்தப் பொருளின் அருமையும் தெரியாமப் போயிரும்.

எல்லாத்துக்கும் கிப்ட்...

எல்லாத்துக்கும் கிப்ட்...

நான் குழந்தையா இருந்தப்ப நல்ல மார்க்ஸ் வாங்கினா தான் கிப்ட் கிடைக்கும். ஆனா, இப்ப சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கிப்ட் கொடுக்குறாங்க. என் பசங்களை எளிமையா வளர்க்க விரும்புறேன்.

சூர்யா குடும்பம்...

சூர்யா குடும்பம்...

ஏன்னா, சூர்யா வீட்ல சூர்யா, கார்த்தி, பிருந்தா மூணு பேரும் அவ்வளவு நல்ல வழிகாட்டுதலோடு வளர்ந்தவங்க. இப்பவும் கோயமுத்தூர்ல அவங்க அம்மாவோட அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப் பொண்ணுக்குக் கல்யாணம்னா உடனே கிளம்பிப் போவாங்க.

பழசை மறக்காத குணம்...

பழசை மறக்காத குணம்...

ஊர்ல திருவிழானா போயிட்டு வருவாங்க. நாம எங்கே போனாலும் பழசை மறக்காத அந்தக் குணம் என் குழந்தைகளுக்கும் இருக்கணும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Jyothika has given some tips for good parenting in a recent interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil