»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கொஞ்ச காலமாக வந்த வாய்ப்புக்களை எல்லாம் தட்டிக் கழித்து வந்த ஜோதிகா இப்போது மடமடவென அட்வான்ஸை வாங்கிப் போட்டுக் கொண்டு கால்ஷீட்டைத் தர ஆரம்பித்துள்ளார்.

சூர்யாவுடன் காதல், விரைவில் டும்..டும்.., இதனால் படங்களை அவர் ஒதுக்கி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த திடீர் மாற்றம் அம்மணியிடம்.

சிம்ரன் ஒதுங்கிக் கொண்டு விட்டதால் இவரைத் தேடி வாய்ப்புக்கள் நிறையவே வருவதாகவும், மனதுக்குப் பிடித்தவரும் ஓ.கே. சொல்லிவிட்டதால், அவரது அனுமதியுடன் தான் இப்போது கால்ஷீட்களை அள்ளித் தருவதாகவும் சொல்கிறார்கள்.

வந்த சான்ஸ்களை ஒதுக்கி, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட பிரேக்கை உடைத்துக் கொண்டு தூள், பிரியமான தோழி, காக்க.. காக்க.. மூலம் திரும்ப ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்த ஜோதிகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவே இல்லை என்பது டைரக்டர்களின் கணிப்பு.

இதனால் அவரிடம் கால்ஷீட் கேட்டு அனத்தியபடியே தான் இருந்தனர். ஆனால், வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்த ஜோதிகா, கே.பாலசந்தர் கேட்டார், சூர்யாவின் பரிந்துரையுடன் அவரது பிரண்ட் விஜய் கேட்டார் என்பதற்காக திருமலை படத்தை மட்டும் ஒப்புக் கொண்டார்.

திருமலைக்குப் பின் யாருக்கும் கமிட்மென்ட் தராமல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியவர், இப்போது மீண்டும் டேட்ஸ் தர ஆரம்பித்திருக்கிறார்.

இந் நிலையில் விக்ரம்- திரிஷா ஜோடியை வைத்து சாமி படத்தை இயக்கிய ஹரி அடுத்து எடுக்க இருக்கும் அருள் படத்தில் முதலில் திரிஷாவைத் தான் போட இருந்தார்களாம் (இதிலும் விக்ரம் தான் ஹீரோ). ஆனால், அதில் இப்போது மாற்றம். திரிஷாவைத் தூக்கிவிட்டு ஜோதிகாவை புக் செய்துள்ளார்கள்.

இந்த வாய்ப்பைத் தக்க வைக்க திரிஷா எவ்வளவோ முயன்றாராம். விக்ரம், ஹரி இருவரையும் நேரில் சந்தித்துப் பேசியும் பயனில்லையாம். இதனால் ஜோதிகாவின் பெயரைச் சொன்னாலே படு டென்சனாகிவிடுகிறார் திரிஷா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil