»   »  ஜோதிலட்சுமி.... கவர்ச்சியிலிருந்து காமெடிக்கு!

ஜோதிலட்சுமி.... கவர்ச்சியிலிருந்து காமெடிக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி நடிகைகளுக்கு உள்ள பிரச்சினையே வயசுதான். என்னதான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு நிலைக்குப் பிறகு, அவர்களை ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளி விடுவார்கள் ரசிகர்கள்.

மறைந்த ஜோதிலட்சுமிக்கும் எண்பதுகளில் அப்படி ஒரு நிலைமை வந்தது. ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நாற்காலியை அவரது தங்கை ஜெயமாலினியும் சிலுக்கு ஸ்மிதாவும் அனுராதாவும் பிடித்துக் கொள்ள, ஜோதிலட்சுமி கொஞ்ச காலம் ஓய்வெடுத்தார்.

Jyothilakshmi's transformation from glam to comedy

தொன்னூறுகளின் இறுதியில் பெரிதாக கவர்ச்சி நடிகைகள் இல்லாத நேரத்தில் தன் மகள் ஜோதி மீனாவை கவர்ச்சிக் களத்திலிறக்கினார். கூடவே தானும் சின்னச் சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதில் முக்கியமான படம் ரஜினியின் முத்து. இந்தப் படத்தில் கொக்கு சைவ கொக்கு பாட்டுக்கு நடனமாடினார் ஜோதிலட்சுமி. 'வயசான சுந்தரியே.. மன்மதன் மந்திரியே.. தாம்பத்யப் பாடத்திலே பிஎச்டி முடித்தவளே..' என ஜோதிலட்சுமியைப் பார்த்து ரஜினி பாடுவதாக பாடல் காட்சி அமைந்திருக்கும்.

தொடர்ந்து அந்த வயதிலும் கவர்ச்சி ப்ளஸ் காமெடி வேடங்களில் கலக்க ஆரம்பித்தார் ஜோதிலட்சுமி. சரத்குமார் நடித்த ஒரு படத்தில் ஜோதிலட்சுமி, ஜோதிமீனா மற்றும் ஜெயமாலினி கவர்ச்சிக் கூட்டணி போட்டி வைத்திருப்பார். அஜீத் - கவுண்டமணி நடித்த நேசம் படத்தில் மகள் ஜோதி மீனாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டிருப்பார் ஜோதிலட்சுமி.

பார்த்திபன் இயக்கிய பச்சக்குதிரை படத்தில் நமீதாவுடன் இணைந்து கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார் ஜோதி லட்சுமி.

மெல்ல அவர் காமெடி ட்ராக்குக்கு மாற ஆரம்பித்தது விவேக் நடித்த படங்களின் மூலம். குறிப்பாக குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் கவர்ச்சி ஏரி என விவேக்கால் வர்ணிக்கப்படுவார்.

இன்னொரு படத்தில் விவேக்குக்கு ஜோடியாகவே வந்தார். அதில் விவேக்குக்கு இரட்டை வேடம். அப்பா விவேக்குக்கு ஜோதிலட்சுமிதான் ஜோடி. பின்னாளில் இதையே தனக்கான பாணியாக மாற்றிக் கொண்டார் ஜோதிலட்சுமி. பல படங்களில் வயதான கவர்ச்சி + நகைச்சுவை நடிகையாக நடித்தார். பின்னர்தான் சின்னத்திரைக்குள் செட்டிலாகிவிட்டார்.

English summary
Though late actress Jyothilakshmi was rocked as item girl in early days, she later transformed her as a glamour comedy actress.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil