»   »  ஜோதிர்மயியின் அடையாளங்கள்

ஜோதிர்மயியின் அடையாளங்கள்

Subscribe to Oneindia Tamil


தமிழில் அடையாளம் இல்லாமல் போய் விட்ட ஜோதிர்மயி, மலையாளத்தில் அடையாளங்கள் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

கல்யாணமாகி, குடியும், குடித்தனமுமாக இருந்த ஜோதிர்மயி, மலையாள நடிகைகளுக்கு தமிழில் கிடைக்கும் துட்டு பிளஸ் செல்வாக்கை உணர்ந்து தமிழுக்கு வந்தார்.

தலைநகரம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். பெரியார் படத்தில் நாகம்மை வேடத்தில் பேசப்பட்டார்.

ஆனால் அவரது கல்யாண மேட்டரும், முத்திப் போன முகமும், தமிழ் ரசிகர்களையும் கவரவில்லை. இயக்குநர்கள், தயாரிப்பாளர்களையும் ஈர்க்கவில்லை.

கிளாமர் காட்டத் தயாராக இருந்தும் கூட ஜோதிர்மயியை யாரும் நாடவில்லை. அதேபோல மலையாளத்திலும் அவரை யாரும் சீண்டவில்லை. இதனால் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டோடு இருந்தார் ஜோதிர்.

இந்த நிலையில் சின்ன இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு பட வாய்ப்பு வந்துள்ளது. மலையாளத்தில் உருவாகும் அடையாளங்கள் என்ற படத்தில் ஜோதிர்தான் நாயகியாம்.

ஆஃப் பீட் படமான இதை இயக்குபவர் எம்.ஜி.சசி. இவர் மலையாள இயக்குநர் டி.வி.சந்திரனின் உதவியாளர் ஆவர். பி.டி.குஞ்சு முகம்மதுவிடமும் அசோசியேட்டாக இருந்தவர். அடையாளங்கள் இவரது முதல் படம்.

இப்படம் குறித்து ஜோதிர் கூறுகையில், இப்படத்தின் கதை ஒவ்வொரு மலையாளிக்கும் தெரிந்த கதை. மலையாள இலக்கிய உலகவில் பிரபலமான எழுத்தாளரான நந்தனார் குறித்த கதைதான் இது.

நான் ஒரு சுத்தமான மலையாளி என்பதால் என்னை இந்த கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் பெரியார் படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டதாலும் இந்த கேரக்டருக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட உதவியாக இருந்தது என்றார் ஜோதிர்.

படத்தின் நாயகனாக கோவிந்தா பத்மசூரியா நடிக்கிறார். நெடுமுடிவேணு, இயக்குநர் டி.வி.சந்திரன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனராம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் ஊரான, பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலத்தில் அக்டோபர் 4ம் தேதி படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர்.

இந்த அடையாளத்தையாவது மிஸ் பண்ணாமல் யூஸ் பண்ணிக்குங்க ஜோதிர்!

Read more about: jyothirmayee
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil