»   »  'சூப்பர் ஸ்டாருடன் நடிச்சிட்டேன்... '- மகிழ்ச்சியின் உச்சத்தில் ரித்விகா

'சூப்பர் ஸ்டாருடன் நடிச்சிட்டேன்... '- மகிழ்ச்சியின் உச்சத்தில் ரித்விகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார் ரித்விகா. பின்னே சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு... அதுவும் மூன்று படங்களிலேயே கிடைத்திருக்கிறதே? இதுவரை இவரது கேரக்டரை மட்டும் ரொம்ப்ப்ப்ப சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் பா.ரஞ்சித். கெட்டப் கூட இன்னும் வெளியாகவில்லை.

ரித்விகாவிடம் அவரது கேரக்டர் பற்றிக் கேட்டால் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். இந்த மகிழ்ச்சி வார்த்தையைப் பற்றி சொல்லுங்களேன் என்றதற்கு...


Kabali Rithvika is in cloud nine

"நான் எல்லாத்துக்குமே இதச் சொல்லுவேன். 'கபாலி' படத்துக்கு முன்னாடி ‘மெட்ராஸ்' பட செட்டுலயே 'மகிழ்ச்சி' செம ஃபேமஸ். ரஞ்சித் சாரோட அசிஸ்டெண்ட் அதியன் அடிக்கடி சொல்லுவாரு. அப்படியே ரஞ்சித் சாரும் ஒவ்வொரு நல்ல ஷாட் முடிஞ்சா அல்லது நல்ல விஷயம் நடந்தா உடனே மகிழ்ச்சினு சொல்லுவாரு.


அத நாங்களும் கோரஸா சொல்லிச் சொல்லி, இப்போ ‘கபாலி' பட டீஸர்ல ரஜினி சார் சொல்லவும், செம வைரல் ஆகிடுச்சு. எங்க பார்த்தாலும், யாரப் பார்த்தாலும் ‘மகிழ்ச்சி'ன்னு சொல்றாங்க. சூப்பர்ல?. ரெகார்ட் ப்ரேக் பண்ணின டீசர்ல வந்ததுன்னா சும்மாவா!" என்கிறார் தன் அகலக் கண்களில் ஆச்சர்யம் காட்டியபடி.


மகிழ்ச்சி!

English summary
Actress Rithvika is in cloud nine because of her dream of acting with the biggest Superstar Rajini comes true through Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil