»   »  கபாலியின் ‘நீலாம்பரி’ ரித்விகா... ‘மலேசிய ரகசியம்’ காக்கும் படக்குழு!

கபாலியின் ‘நீலாம்பரி’ ரித்விகா... ‘மலேசிய ரகசியம்’ காக்கும் படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தில் நடிகை ரித்விகா முக்கியமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ராஸ் படத்தில் அன்பு மனைவியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து தற்போது ஒருநாள் கூத்து படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.


இது தவிர ரஜினியின் கபாலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரித்விகா. ஆனால், அவரது புகைப்படத்தைக் கூட போஸ்டர்களில் வெளியிடாமல், அவரது கதாபாத்திரத்தை பரம ரகசியமாகக் காத்து வருகிறது படக்குழு.


மீனா...

மீனா...

மலேசியாவில் நடக்கும் கதையில் வருகிறாராம் ரித்விகா. படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் மீனா. பயங்கர சென்சிடிவ் பெண்ணாக நடித்திருக்கிறாராம்.


ரகசியம்...

ரகசியம்...

அதுமட்டுமின்றி, படத்தில் ரஜினிக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரித்விகா தான் எனக் கூறப்படுகிறது. இதனால் தான் அவரது புகைப்படங்களை வெளியிடாமல் வைத்திருக்கிறார்களாம்.


ரஜினியின் பாராட்டு...

ரஜினியின் பாராட்டு...

ரஜினியும், ரித்விகாவும் சேர்ந்து வரும் காட்சிகளை படமாக்கும்போது, ரித்விகாவின் நடிப்பைப் பார்த்து ரஜினியே அசந்து விட்டாராம். ரஞ்சித்திடம் கூட இது தொடர்பாக அவர் பாராட்டினாராம்.


கைதட்டல்...

கைதட்டல்...

ஒரு முறை ரித்விகா வசனம் பேசி முடித்து கட் சொன்னவுடன், ரஜினி ரொம்ப நேரம் கைதட்டி பாராட்டினார். அந்தளவுக்கு அவருடைய பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம். நிச்சயமாக கபாலி படம் பார்க்கும் அனைவரையும் ரித்விகா கதாபாத்திரம் ஆச்சர்யப்படுத்தும் என்கிறது படக்குழு.


நீலாம்பரி...

நீலாம்பரி...

படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் அளவிற்கு, கபாலியில் ரித்விகாவின் கதாபார்த்திரம் பேசப்படும் எனக் கூறப்படுகிறது. ரஜினிக்கு வில்லியாக அவர் நடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


English summary
Remember Neelambari from Thalaivar's Padayappa, essayed by Ramya Krishnan, who won over audiences with her role? Apparently, Rajinikanth-starrer Kabali is said to feature a similar character and it will be essayed by actress Ritwika, who rose to fame after her terrific performance in director Pa. Ranjith's Madras.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil