»   »  "காதல்" சந்தியா இப்போ குத்தாட்ட சுந்தரி!

"காதல்" சந்தியா இப்போ குத்தாட்ட சுந்தரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்துக்குட்டி படம் மூலமாக குத்தாட்டத்தில் குதித்துள்ளார் "காதல்" நாயகி சந்தியா. காதல் படத்தில் நாயகியாக அறிமுகமாகி சில பல படங்களில் நடித்து பின்னர் காணாமல் போன சந்தியா கத்துக்குட்டி படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

ஆனால் இந்தப் பாட்டில் அவர் படத்தின் நாயகன் நரேனுடன் ஆடவில்லை. மாறாக சூரியுடன் ஆட்டம் போட்டுள்ளார்.


அதி அமைதி நாயகியாக அறியப்பட்ட சந்தியா, இப்பாடலில் அதி வேக குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் உள்ளது.


விவசாயிகளின் பிரச்சினை...

விவசாயிகளின் பிரச்சினை...

நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ள படம்தான் கத்துக்குட்டி. அரசியல் தலைவர்கள் பலரும் இதைப் பாராட்டியுள்ளனர். காரணம், படத்தில் விவசாயிகளின் பிரச்சினையை தொட்டுள்ளனர்.


எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

இப்படம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மிகவும் கவர்ந்துள்ளது. பல பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


குத்துப்பாட்டு...

குத்துப்பாட்டு...

இப்படிப்பட்ட கத்துக்குட்டி படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம் பெற்றுள்ளது. குத்துப்பாட்டாக இருந்தாலும் கூட ஆபாசம் அதிகம் இல்லாமல் அழகாகவே எடுத்துள்ளனர்.


சரக்கடிக்கும் காட்சி...

சரக்கடிக்கும் காட்சி...

என்ன வழக்கம் போல சரக்கு அடிப்பது போல இதில் காட்சி உள்ளது. அதுதான் சற்று இடிக்கிறது. நரேன், சூரி உள்ளிட்டோர் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் பின்னணியில் பாடல் வருகிறது.


காதல் சந்தியா...

காதல் சந்தியா...

சூரியும், குரூப் டான்ஸர்களும் உற்சாகத்தில் ஆட்டம் போட அவர்களுடன் சேர்ந்து சந்தியாவும் ஆடிப் பாடுகிறார். "சிக்கன்" நான் இல்லடா "சொக்கன்" நீ இல்லடா, மீனாட்சி சிக்காதுடா என்ற தத்துவத்தையும் இந்தப் பாடல் வரிகளில் இணைத்து கலக்கியுள்ளனர்.


வரவேற்பு...

இந்தப் பாட்டுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தால் சந்தியா தொடர்ந்து குத்துப் பாட்டுகளுக்கு ஆடினாலும் ஆட வாய்ப்புண்டு. பார்க்கலாம் மக்கள் தரப் போகும் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை.


English summary
The Kadhal film fame actress Sandhya have did a item song in upcoming film Kaththukuti.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil