»   »  ராஜாவின் காஜல்

ராஜாவின் காஜல்

Subscribe to Oneindia Tamil

பாரதிராஜாவின் புதிய கண்டுபிடிப்பாக கோடம்பாக்கத்திற்கு வந்துள்ளார் காஜல்.

பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்ட யாரும் சோடை போனதில்லை. ரதி அக்னிஹோத்ரி, ராதிகா, ரேவதி, ராதா, சுகன்யா, ரஞ்சிதா, ப்ரியா மணி என இந்த வரிசை ரொம்ப நீளம்.

பாரதிராஜாவின் கடைசி அறிமுகம் ப்ரியா மணி. கொஞ்சம் லேட்டானாலும் இப்போது படு ரகளையாக பிக்கப் ஆகியுள்ளார் ப்ரியா மணி. இந்த வரிசையில் புதிதாக வந்து சேர்ந்துள்ளார் காஜல்.

நானா படேகர், அர்ஜூன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பொம்மலாட்டம் படத்தில் காஜல்தான் நாயகி. இந்தியில் இப்படம் சினிமா என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதைத்தான் பொம்மலாட்டம் என தமிழ்படுத்தியுள்ளார் பாரதிராஜா. ஜூலையில் படம் வெளியாகிறது.

காஜல் படு கூலாக இருக்கிறார். லட்சுமிகரமான முகம் என்று சொல்வார்களே, அது இவருக்குப் பொருந்தம். நளினம், நயனம், நாகரீகம் என அத்தனையும் சேர்ந்து அட்டகாச கலவையாக இருக்கிறார் காஜல்.

முதல் படம் வருவற்கு முன்பாகவே காஜலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. இரு மொழிகளையும் சேர்ந்த பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் காஜலை அணுக ஆரம்பித்துள்ளனராம்.

தனது பழனி படத்தில் காஜலை, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் புக் செய்துள்ளார். ஷக்தி சிதம்பரம் இப்படத்தை தயாரிக்கிறார். பேரரசு இயக்குகிறார். பரத் இதில் நாயகனாக நடிக்கிறார். குஷ்பு, பரத்தின் அக்காவாக வருகிறார்.

இதுதவிர தனுஷ் நடிக்கும் பொல்லாதவன் படத்திலும் காஜலுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் தெலுங்கு நாயகி பூனம்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் போட்டோ செஷன் முடித்துப் பார்த்தபோது, தனுஷுக்கு சித்தி போல தெரிந்தாராம் பூனம். இதையடுத்து இளமை பொங்கும் காஜலைப் போட்டு விட்டு பூனத்தைத் தூக்கி விட்டனர்.

இப்படி அடுத்தடுத்து படங்கள் குவிவதால் காஜல் படு சந்தோஷமாக உள்ளார். என்ன காஜல் பட மழை பொழிய ஆரம்பித்து விட்டது போல என்று ஆரம்பித்தபோது, நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரப் பெண் சார். பாரதிராஜா சாரின் கையால் குட்டுப்பட்ட நேரம் நிறையப் படங்கள் வருகிறது.

பொம்மலாட்டம் படப்பிடிப்பின்போது அவர் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தார். அவர் அடிக்கடி கோபப்படுவார், டென்ஷன் ஆவார் என்று பலரும் பயமுறுத்தினார்கள். ஆனால் அவர் ஒருமுறை கூட என்னிடம் கோபப்படவில்லை.

பொம்மலாட்டம் எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். தெலுங்கிலிருந்துதான் நிறையப் படங்கள் வருகின்றன. இருப்பினும் நல்ல கேரக்டர்கள் கொண்ட படங்களை மட்டுமே ஒப்புக் கொள்ளப் போகிறேன் என்றார் காஜல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil