காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துடுச்சா.... ரசிகர்களை அதிர வைத்த இன்ஸ்டா போஸ்டா
சென்னை : தமிழ், தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோயினாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் விஜய், அஜித், தனுஷ், கார்த்தி என டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
புகழின் உச்சியில் இருந்த போது திருமணத்தை அறிவித்த காஜல் அகர்வால், கடந்த ஆண்டு கெளதம் கிட்சுலு என்ற தொழிலதிபரை மும்பையில் திருமணம் செய்து கொண்டார். கொரோனா காரணமாக காஜல் அகர்வாலின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் பிஸி
திருமணத்திற்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். விடாது கவர்ச்சி ஃபோட்டோஷுட்களையும் நடத்தி அசத்தி வருகிறார். இந்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியா பக்கங்களிலும் காஜல் அகர்வால் பகிர்ந்து வருகிறார்.

காஜல் அகர்வால் கர்ப்பமா
சமீபத்தில் தங்கள் வீட்டில் நடைபெற்ற பாரம்பரிய முறையிலான சடங்குகளின் ஃபோட்டோக்களையும் காஜல் பகிர்ந்திருந்தார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தான் இந்த சடங்குகள் நடத்தப்பட்டதாகவும் பலர் கூறினர். ஆனால் அது பற்றி காஜல் அகர்வால் தரப்பில் ஏதும் உறுதி செய்யப்படவில்லை.

குழந்தை பிறந்துடுச்சா
இந்நிலையில் தங்களின் சோஷியல் மீடியாவில், முதல் குழந்தையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளனர் காஜல் அகர்வால். இதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காஜல் அகர்வால் எப்போது கர்ப்பமாக இருந்தார். அதற்குள் குழந்தை பிறந்து விட்டதா என கேட்க துவங்கி விட்டனர்.

இதுதான் விஷயமா
பிறகு தான் காஜல் அகர்வால் தம்பதி அதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அதில், முதல் குழந்தை என அவர்கள் கூறுவது தங்களின் செல்ல நாய்க்குட்டி மியாவை தானாம். இதை ஃபோட்டோவுடன் மகிழ்ச்சி பொங்க வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

சந்தோஷத்தில் காஜல் அகர்வால்
இதோடு அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், எங்கள் குடும்பத்தில் புதிதாக குட்டி மியா இணைந்துள்ளார். என்னை தெரிந்த அனைவருக்கும் தெரியும் எனக்கு நாய்க்குட்டி என்றால் மிகவும் பிடிக்கும் என்று. கிட்சுலுவும் நாய்க்குட்டி பிரியர் தான். அன்பை புரிந்து கொண்டு, பகிர்வது தான் வாழ்க்கை கற்றுக் கொடுத்தது. மிலா எங்கள் குடும்பத்திற்கு அதிகப்படியான கொண்டாட்டம், ஆச்சரியத்தை தந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஏமாற்றத்தில் ரசிகர்கள்
அட இது தான் விஷயமா. நாங்க கூட என்னவோ ஏதோ என நினைத்து விட்டோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுக்கு தானா இந்த பில்டப் என கூறி உள்ளனர். அதே சமயம் ரசிகர்கள் பலர் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











