»   »  ஹாய்! ட்விட்டரில் அட்டெண்டன்ஸ் போட்ட காஜல் அகர்வால்

ஹாய்! ட்விட்டரில் அட்டெண்டன்ஸ் போட்ட காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுநாள்வரை பேஸ்புக்கில் மட்டும் கணக்கு வைத்திருந்த காஜல் அகர்வால் காலத்திற்கு ஏற்றவாறு தற்போது ட்விட்டர் பக்கம் வந்திருக்கிறார்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் நடிகர்கள்-ரசிகர்கள் இடையேயான உறவில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

சமூக வலைதளங்களால் நடிக, நடிகையர் தங்களது படங்கள் குறித்த விவரங்கள், செய்திகளை ரசிகர்களிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தற்போது ட்விட்டர் பக்கத்தில் இணைந்திருக்கிறார்.

மகேஷ்பாபுவின் 'பிரமொத்சவம்' படத்தில் நடித்து வரும் அப்படத்தின் போஸ்டரை தனது முதல் ட்வீட்டாக பதிவேற்றியிருக்கிறார். சேர்ந்த ஒரேநாளில் 27௦௦௦ ரசிகர்கள் இவரைப் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

இதுதவிர ட்விட்டருக்கு வந்த காஜல் அகர்வாலை ஜீவா, ராணா, சமந்தா, தமன்னா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.

ரசிகர்கள், நண்பர்களின் அமோக ஆதரவால் காஜல் இப்போ ஹேப்பி அண்ணாச்சி!

English summary
Yesterday Actress Kajal Agarwal Joins Twitter with Brahmotsavam Tweet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil