»   »  ராம் சரண் கேட்டும் சிரஞ்சீவிக்கு 'நோ' சொன்ன காஜல் அகர்வால் ...தவிப்பில் படக்குழு!

ராம் சரண் கேட்டும் சிரஞ்சீவிக்கு 'நோ' சொன்ன காஜல் அகர்வால் ...தவிப்பில் படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சிரஞ்சீவிக்கு ஜோடி யார்? என்பதுதான் டோலிவுட்டின் ஹாட் டாக்.

மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிரஞ்சீவி கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பின், மீண்டும் மேக்கப் போட்டு நடித்து வரும் படம் 'கத்திலண்டோடு'.

இரட்டை வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கும் இப்படத்தை அவரின் மகனும், நடிகருமான ராம் சரண் சொந்தமாகத் தயாரித்து வருகிறார். லைக்கா இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது.

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

வி.வி.விநாயக் இயக்கும் இப்படத்தில் இசைக்கு தேவிஸ்ரீ பிரசாத், ஒளிபதிவுக்கு ரத்னவேலு என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களை பார்த்துபார்த்து ராம்சரண் ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹீரோயின்

ஹீரோயின்

ஒரு முன்னணி ஹீரோயினை சிரஞ்சீவிக்கு ஜோடியாக்க படக்குழு தீயாய் வேலை செய்து வருகிறது. ஆனால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் முன்னணி ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்திடும் முயற்சிகள் பலிக்கவில்லை. ராம் சரணே களத்தில் இறங்கி தமிழ், இந்தி என பல முன்னணி ஹீரோயின்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ராம் சரண்

ராம் சரண்

ஆனால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் பலரும் விரும்பவில்லை. இதனால் சம்பளம் அதிகமாகக் கேட்டு வாய்ப்பை நிராகரித்து விடுகின்றனர். ஹீரோயின்களின் நிராகரிப்பால் என்ன செய்வது எனத் தெரியாமல் ராம் சரண் தவித்து வருகிறாராம்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

சமீபத்தில் காஜல் அகர்வாலிடம் இதற்காக அணுகியபோது 2.5 கோடிகளை சம்பளமாகக் கேட்டு படக்குழுவை ஓட விட்டிருக்கிறார். காஜல் நடிப்பில் வெளியான 'பிரமோத்சவம்', 'சர்தார் கப்பர் சிங்' இரண்டுமே தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வியைச் சந்தித்தது. இருந்தும் காஜல் இவ்வளவு தொகையை சம்பளமாகக் கேட்டதால் மீண்டும் வேறு ஹீரோயின் தேடும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது.

வில்லன்

வில்லன்

இதேபோல சிரஞ்சீவிக்கு வில்லன் யார்? என்பதையும் படக்குழு முடிவு செய்யவில்லையாம். படப்பிடிப்பிற்கு முன்பே இதில் நடிக்க வேண்டாம் என தஞ்சாவூர் மக்கள் அவருக்கு கடிதங்கள் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Actress Kajal Agarwal asked 2.5 Crore Salary for Chiranjeevi's 150th Filck.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil