»   »  நான் அப்படி செய்ததை நீங்க பார்த்தீங்களாக்கும்: காஜல் அகர்வால்

நான் அப்படி செய்ததை நீங்க பார்த்தீங்களாக்கும்: காஜல் அகர்வால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்யவில்லை என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். அஜீத்தின் விவேகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் ராணாவுடன் சேர்ந்து நேனே ராஜு நேனே மந்திரி படத்தில் நடித்துள்ளார்.

Kajal Agarwal rubbishes a rumour about her

தற்போது அவர் விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 32 வயதாகும் காஜல் அகர்வால் தனது அழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக பேசப்படுகிறது.

இது குறித்து காஜல் கூறியிருப்பதாவது,

நான் ஏன் அறுவை சிகிச்சை செய்து அழகை மெருகேற்ற வேண்டும். எனக்கு அந்த தேவையே இல்லை. நான் டயட்டில் இருக்கிறேன், ஒர்க்அவுட் செய்கிறேன். அதுவே என் அழகின் ரகசியம் என்கிறார்.

English summary
Kajal Agarwal has rubbished the rumour that she went under knife to enhance her beauty.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil