»   »  "நோ கிளாமர் ஒன்லி நடிப்பு" காஜல் அகர்வாலின் புது முடிவு

"நோ கிளாமர் ஒன்லி நடிப்பு" காஜல் அகர்வாலின் புது முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாகத் திகழும் காஜல் அகர்வால் தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் மிகவும் கவர்ச்சி காட்டி நடித்து வந்தவர் காஜல் அகர்வால். நடிப்பை விட காஜலின் கவர்ச்சி தான் படங்களில் அதிகம் இருக்கும் என்ற பெயரை வாங்கிய காஜல் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

Kajal Agarwal's New Decision

இனிமேல் நடிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஏற்பது என்று சபதமேற்றிருக்கும் காஜல் அதன் முதல் கட்டமாக டு லப்ஸான் கி கஹானி என்ற படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.

இதற்காக பார்வையற்ற பள்ளிக்கு சமீபத்தில் சென்று அவர்களின் உடல் மற்றும் செயல்பாடுகளை கவனித்து இருக்கிறார். மேலும் தான் கவனித்தவற்றை படத்தில் பயன்படுத்தவும் காஜல் முடிவு செய்திருக்கிறார்.

தமிழில் தற்போது கவலை வேண்டாம் படம் மட்டுமே காஜலின் கைவசம் உள்ள நிலையில், விக்ரமை வைத்து திரு இயக்கும் புதிய படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படவாய்ப்பை இழந்த காஜல் தற்போது இந்தப் படத்திலாவது விக்ரமுடன் இணைவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவாரா காஜல்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Actress Kajal Agarwal says in Recent Interview "after this i will give More Importance to Acting".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil