»   »  'பக்கா லோக்கல்' படுத்தும்பாடு: தயாரிப்பாளர்களை பார்த்து தெறித்து ஓடும் காஜல்

'பக்கா லோக்கல்' படுத்தும்பாடு: தயாரிப்பாளர்களை பார்த்து தெறித்து ஓடும் காஜல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆருடன் சேர்ந்து பக்கா லோக்கல் குத்துப் பாடலுக்கு ஆடியதையடுத்து டோலிவுட்டில் பலரும் காஜல் அகர்வாலை குத்தாட்டம் போட அழைக்கிறார்களாம்.

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., சமந்தா, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த ஜனதா கராஜ் தெலுங்கு படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் ரூ.23 கோடி வசூல் செய்துள்ளது.

படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால் பக்கா லோக்கல் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தனர்.

குத்தாட்டம்

குத்தாட்டம்

பக்கா லோக்கல் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. ரசிகர்கள் அந்த வீடியோவையே திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள். ஒரே குத்துப்பாட்டில் காஜல் மொத்த தெலுங்கு திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

காஜல்

காஜல்

பக்கா லோக்கல் ஹிட்டானதையடுத்து டோலிவுட் தயாரிப்பாளர்கள் ஆளாளுக்கு காஜல் அகர்வாலை அணுகி தங்கள் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வருமாறு அழைக்கிறார்களாம்.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர்.

நான் ஹீரோயினாகத் தான் நடிக்க விரும்புகிறேன். குத்துப்பாடலுக்கு ஆட மாட்டேன் என்று கூறி வருகிறாராம் காஜல். ஜனதா கராஜ் படத்தில் நண்பர் ஜூனியர் என்.டி.ஆருக்காக ஆடினேன் என்று தயாரிப்பாளர்களிடம் விளக்கம் அளித்து வருகிறார் காஜல்.

தல 57

தல 57

காஜல் தற்போது சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் தல 57 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியின் 150வது படமான கைதி நம்பர் 150ல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

English summary
After Pakka Local song from Janatha Garage, Kajal Agarwal is flooded with offers to do item numbers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil