»   »  காதலிக்கிறார்கள்.. கல்யாணம் செய்கிறார்கள்.. பிரிகிறார்கள்: யாரை சொல்கிறார் காஜல்?

காதலிக்கிறார்கள்.. கல்யாணம் செய்கிறார்கள்.. பிரிகிறார்கள்: யாரை சொல்கிறார் காஜல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலித்து திருமணம் செய்கிறார்கள். ஆனால் திருமணமான வேகத்தில் ஒத்து வரவில்லை என்று கூறி பிரிந்துவிடுகிறார்கள். பல பேர் காதலில் உண்மையாக இல்லை என்கிறார் காஜல் அகர்வால்.

கோலிவுட் மற்றம் டோலிவுட்டில் காஜல் அகர்வால் பற்றி தான் பேச்சாகக் கிடக்கிறது. காரணம் தமிழில் அஜீத்துடன் ஜோடி சேர்ந்துவிட்டார். தெலுங்கில் ரொம்பவே சீனியரான சிரஞ்சீவிக்கு ஜோடியாகியுள்ளார்.

31 வயதாகும் காஜலுக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. இந்நிலையில் காதல், திருமணம் குறித்து அவர் கூறுகையில்,

காதல்

காதல்

காதலிக்கும் இளைஞர்களை பார்த்தால் பாவமாக உள்ளது. பால், தண்ணீர், பருப்பு போன்று காதலிலும் கலப்படம் வந்துவிட்டது. காதல் என்பது அழகான, அபூர்வமான ஒன்று. ஆனால் தற்போது சுயநல காதல்கள் அதிகரித்துள்ளது.

சிரிப்பு

சிரிப்பு

காதலித்தால் உண்மையாக இருக்க வேண்டும். இன்றைய காதலர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு, சிரிப்பாக வருகிறது. காரணம் அவர்கள் காதலில் உண்மையாக இல்லை. பேருக்கு காதலிக்கிறார்கள்.

திருமணம்

திருமணம்

காதலித்து திருமணம் செய்கிறார்கள். ஆனால் திருமணமான வேகத்தில் ஒத்து வரவில்லை என்று கூறி பிரிந்துவிடுகிறார்கள். தவறு எங்கே என்பதை கண்டுபிடித்து சரி செய்ய யாருக்கும் பொறுமை இல்லை.

மதிப்பு தெரியாதவர்கள்

மதிப்பு தெரியாதவர்கள்

காதலின் மதிப்பு தெரியாதவர்கள் எல்லாம் காதலிக்கிறார்கள். நான் யாரையாவது காதலித்தால் உண்மையாக இருப்பேன். எனக்கு எப்பொழுது திருமணம் என்று பலர் கேட்கிறார்கள்.

ஆசை தான்

ஆசை தான்

எனக்கும் திருமணம் செய்து கொள்ள ஆசையாக தான் உள்ளது. ஆனால் மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லையே. அவரை பார்க்கும்போது காதலித்து திருமணம் செய்து கொள்வேன்.

English summary
Kajal Agarwal said that people are falling in love and getting married to part ways soon because of misunderstanding.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil