Just In
- 34 min ago
சூப்பர் ஹீரோ ஆரி.. மின்னல் வேகத்துல போறாரே.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் பாடல் ரிலீஸ்!
- 1 hr ago
தங்கச்சிலை போல ஜொலிக்கும் துல்கர் சல்மான் பட நடிகை!
- 1 hr ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாமே..பாலாஜிக்கு அதுவும் இல்லையாம்? தீயாய் பரவும் தகவல்!
- 1 hr ago
தீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்!
Don't Miss!
- News
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... 5 நாட்களில்... 1500 ரூம்கள் கொண்ட மருத்துவமனையை கட்டி அசத்திய சீனா
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Sports
கொரோனா வைரஸ் பாஸிடிவ்.. ஆனாலும் போட்டியில் ஆட சாய்னாவுக்கு அனுமதி.. செம ட்விஸ்ட்!
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- Finance
லாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாரி நாயகி காஜலின் 29வது பிறந்தநாள் இன்று
சென்னை: 1985 ம் ஆண்டு ஜூன் மாதம் 19 ம் தேதி மும்பையில் சுமன் அகர்வால் - வினய் அகர்வால் தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்த காஜல் அகர்வால் இன்று தனது 29 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
கல்லூரிப் படிப்பை மும்பையில் முடித்த காஜல் விளம்பரப் படங்களின் மூலம் திரைத் துறையில் அடியெடுத்து வைத்தார். 2004 ம் ஆண்டில் கியூன் ஹோ கயா நா என்னும் இந்தித் திரைப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயின் தோழியாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
2007 ம் ஆண்டில் லட்சுமி கல்யாணம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான காஜலுக்கு,லட்சுமி கல்யாணம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. எனினும் அதே ஆண்டின் இறுதியில் வெளிவந்த சந்தமாமா படம் ஹிட்டடித்து இவரின் தெலுங்கு பிரவேசத்திற்கு விளக்கு ஏற்றிவைத்தது.

தமிழில் பாரதிராஜாவின் மூலமாக
பல முன்னணி நட்சத்திரங்களை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா தனது பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலமாக தமிழில் காஜலை கதாநாயகியாக அறிமுகப் படுத்தினார்.

முந்திக் கொண்ட பழனி
அறிமுகமான படம் பொம்மலாட்டம் என்றாலும் தமிழில் காஜலின் நடிப்பில் வெளிவந்த முதல் படம் படம் பழனி. இயக்குநர் பேரரசுவின் இயக்கத்தில் பரத் ஜோடியாக நடித்த பழனி திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

தமிழ் தெலுங்கில் ஒருசேரக் கைகொடுத்த மகதீரா
2009 ம் ஆண்டில் இயக்குநர் ராஜமௌலி இயக்கிய மகதீரா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒருசேர வெளிவந்தது. இளவரசி மித்ரா தேவியாக நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக காஜல் நடித்து வெளிவந்த இந்தப்படம் ஒரேநாளில் தமிழ் மற்றும் தெலுங்கில் காஜலின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தெலுங்கில் முன்னணி நாயகி
மகதீரா படத்தின் வெற்றியால் தொடர்ந்து பிசினஸ்மேன், மிஸ்டர் பர்பெக்ட், பிருந்தாவனம் போன்ற படங்களின் மூலம் குறுகிய காலத்திலேயே தெலுங்கின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

இந்தியிலும் வெற்றி நடிகை
அறிமுகமான இந்திப் படம் தோல்வி அடைந்தாலும் மீண்டும் சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து அந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்தியிலும் கால் பதித்தார். இவர் தொடர்ந்து நடித்த ஸ்பெஷல் 26 படமும் வெற்றி பெற இந்தியிலும் வெற்றி நாயகியாக மாறி விட்டார் காஜல்.

தமிழில் முன்னணி நாயகி
நடிகர் கார்த்தியின் ஜோடியாக நான் மகான் அல்ல படத்தின் மூலம் பல வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் நடிக்க வந்த காஜல் படத்தின் வெற்றியால் தொடர்ந்து துப்பாக்கி, மாற்றான் மற்றும் ஜில்லா போன்ற படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

தனுஷுடன் மாரியில்
தற்போது நடிகர் தனுஷின் ஜோடியாக மாரி, விஷாலின் ஜோடியாக பாயும் புலி போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் பல படங்கள் காஜல் கைவசம் உள்ளது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் காஜல்.......