»   »  பாடகியாக மாறிய காஜல் அகர்வால்.. கன்னட பவர்ஸ்டாருக்காக!

பாடகியாக மாறிய காஜல் அகர்வால்.. கன்னட பவர்ஸ்டாருக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் சக்கரவியூகா படத்தின் மூலம் பாடகி அவதாரம் எடுக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகையாகத் திகழும் காஜல் அகர்வால் இதுவரை தான் நடித்த எந்த ஒரு படத்திலும் பாடியதில்லை.

இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் 25 வது படமாக உருவாகி வரும் சக்கரவியூகா படத்தில் ஒரு டூயட் பாடலை பாடியிருக்கிறார் காஜல் அகர்வால்.

Kajal Aggarwal to debut singer for Chakravyuha

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கே லோகித்தும், காஜல் அகர்வாலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இந்த வாய்ப்பை வழங்கி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் லோகித்.

மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் இந்தப் பாடல் பதிவு நேற்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றிருக்கிறது. முதன்முதலாக பாடும் பாடல் என்பதால் இந்த வாய்ப்பை ஒரு திரில் தரும் அனுபவமாக காஜல் உணர்ந்திருக்கிறார்.

எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆரும் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.

மற்றொருபுறம் பவன் கல்யாணின் சர்தார் கப்பர் சிங், மகேஷ்பாபுவின் பிரமோத்சவம் மற்றும் தமிழில் விக்ரம் படம் என்று நடிப்பிலும் தற்போது பிஸியாகவே இருக்கிறார் காஜல் அகர்வால்.

English summary
Kannada Powerstar Puneet Rajkumar's 25th film Chakravyuha, Actress Kajal Agarwal has sung for the First Time.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil