உடம்பை வளைத்து காஜல் அகர்வால் கொடுத்த போஸ்...வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
சென்னை : தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு மொழிகளிலும் இவர் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தொழிலதிபரான கவுதம் கிட்சுலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் ஆச்சாரியா, கோஸ்டி, மும்பை சாகா, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஃபிட்னசிலும் அதிகம் ஆர்வம் கொண்ட காஜல் அகர்வால், சமூக வலைதளங்களிலும் படுபிஸியாக இருந்து வருகிறார். தற்போது உடலை நம்ப முடியாத அளவிற்கு வளைத்து, யோகா போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் காஜல்.
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ள இந்த யோகா போசை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த போட்டோவுடன், ஃபிட்னஸ் இந்தியா மூவ்மென்டுக்காக தான் இந்த செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











