»   »  அப்பா வயது சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க காஜலுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

அப்பா வயது சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க காஜலுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அப்பா வயது இருக்கும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

அரசியலில் பிசியாக இருந்த சிரஞ்சீவியை மீண்டும் படங்களில் நடிக்க வருமாறு ரசிகர்கள் அழைத்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி இளைய தளபதி விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

படத்தை வி.வி. விநாயக் இயக்க, சிருவின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார்.

ஹீரோயின்

ஹீரோயின்

சிரஞ்சீவிக்கு ஹீரோயின் தேடுவதற்குள் ராம் சரண் தேஜாவுக்கு கண்ணை கட்டிவிட்டது. அவரும் டோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்று வந்துவிட்டார் ஹீரோயின் கிடைக்கவில்லை. எல்லாம் நான் மாட்டேன், நீ மாட்டேன் என்று எஸ்கேப்பாகிவிட்டனர்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

தெலுங்கு திரையுலகின் சமத்து நாயகி என்றால் காஜலின் பெயரை தான் சொல்வார்கள். அதனால் ராம் சரண் காஜலிடம் சென்று தனது தந்தையுடன் நடிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவருக்காக அப்பா வயதில் இருக்கும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் காஜல்.

சம்பளம்

சம்பளம்

தெலுங்கு திரையுலகில் ஒரு படத்தில் நடிக்க காஜல் ரூ. 1.25 கோடி வாங்குகிறார். இந்நிலையில் சீனியர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ரூ.2 கோடி வாங்கியுள்ளார். சிருவின் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட்டும் கொடுத்துள்ளார் காஜல்.

இரண்டு பிளாப்

இரண்டு பிளாப்

காஜல் நடிப்பில் வெளிவந்த கடைசி இரண்டு படங்களான சர்தார் கப்பார் சிங் மற்றும் பிரம்மோற்சவம் ஆகியவை ஊத்திக் கொண்டன. இருப்பினும் காஜலுக்கு சம்பளம் மட்டும் உயர்ந்துள்ளது.

English summary
Bubbly Kajal Agarwal has got Rs. 2 crore to act with senior Chiranjeevi in his 150th movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil