»   »  சொந்தக் குரலில் பேச ரொம்ப நாளா ஆசைப்படும் காஜல்!

சொந்தக் குரலில் பேச ரொம்ப நாளா ஆசைப்படும் காஜல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை காஜல் அகர்வால் விரைவில் தனது படத்திற்கு தானே டப்பிங் பேச இருப்பதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தமிழில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். தனுஷ், கார்த்தி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுல் ஒருவராக உள்ளார். தமிழில் அடுத்ததாக இவர், விக்ரம் ஜோடியாக கருடா படத்தில் நடிக்கிறார்.

Kajal wants to dub in her own voice

இந்நிலையில், தனது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம். விரைவில் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்க இருக்கிறாராம்.

இவருக்கு ஓரளவுக்கு தமிழ் பேசத் தெரியும் என்றாலும், இன்னும் சரளமாக பேச வரவில்லை. தமிழை விட தெலுங்கை சுலபமாகக் கற்றுக் கொண்டதாகக் கூறும் காஜல், எப்படியும் கூடிய சீக்கிரம் சரளமாக தமிழ் பேசக் கற்று தனது படங்களுக்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

English summary
Kajal Aggarwal, whose next project in Kollywood is the Vikram-starrer Garuda, says she would like to dub in her own voice for Tamil films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil