»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கஜாலாவுக்கு நல்ல இடத்தில் நல்ல மச்சம் உள்ளது போலிருக்கு. "ஏழுமலை"யில் கலக்கிய அவருக்கு தன்னுடைய அடுத்த படத்திலும் அர்ஜூன் வாய்ப்புகொடுத்துள்ளாராம்.

கஜாலாவின் ஒத்துழைப்பு மற்றும் நடிப்பால் கவரப்பட்ட அர்ஜூன் தனது அடுத்த படமான "சர்வாதிகாரி"யிலும் அவரை தனது ஜோடியாக புக்செய்துள்ளாராம்.

கே. சுபாஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்காக பாபிலோனின் தொங்கும் தோட்டத்திற்கெல்லாம் சென்று படமாக்கவுள்ளார்களாம்.

"ஏழுமலை" படத்தின் மூலம் மும்தாஜின் அடுத்த பாட்டும் ஹிட்டாகி விட்டது. "மல மலே"யை விட இந்தப் படத்தின் "லக்சு பாப்பா லக்சு பாப்பா"என்ற பாடல் தமிழகத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது.

இந்தப் படத்தில் மும்தாஜ், கஜாலா தவிர சிம்ரனையும் ஜோடியாக்கிக் கொண்டார் "ஏழுமல" அர்ஜூன். "சர்வாதிகாரி"யில் எத்தனை பேரோ?

சங்கவியும் ரெடி:

மும்தாஜ் மற்றும் மந்த்ராவுக்குப் போட்டியாக சங்கவியும் கவர்ச்சிக் குளத்தில் குதித்துள்ளார்.

"நான் ரெடி, இனி நீங்க ரெடியா?" என்று கேட்டு இளம் உள்ளங்களில் தீ மூட்டிய சங்கவி இப்போது சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து இளைஞர்களைப் புலம்ப வைக்கப்போகிறார்.

"பாபா"வில் ரஜினியுடன் சேர்ந்து ஒரு கவர்ச்சிப் பாடலுக்கு ஆடியுள்ளாராம் சங்கவி. கிட்டத்தட்ட மும்தாஜ் லெவல் பாட்டாக இது இருக்குமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil