»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

"ஏழுமலை" படத்தின் கதாநாயகியான நடிகை கஜாலா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நடிகர் அர்ஜூன் நடித்து இயக்கியுள்ள "ஏழுமலை" படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் இரு கதாநாயகிகளுள் சிம்ரன் ஒருவர். மற்றொருவர் கஜாலா. கஜாலா தற்போது அதிகமானதெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் நேற்று முன் தினம் கலந்து கொண்டார் கஜாலா.

அன்று இரவு அவர் திடீரென்று அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு மயங்கி விழுந்தார்.நடிகர் அர்ஜூனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தார்.

கஜாலா மயங்கி விழுந்த விஷயம் தெரிந்ததும் அர்ஜூன் அவரை உடனடியாக அங்குள்ள நிஜாமுதீன்மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு கஜாலாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது நன்கு குணமாகிவிட்டார்.இனி அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்களும் கூறிவிட்டனர்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான உதய்கிரணும் இவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள கஜாலா கேட்ட போது, அதற்கு உதய்கிரண் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.இதையடுத்து தான் கஜாலா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil