»   »  'மாட்டிறைச்சி சூப்'பால் சர்ச்சையில் சிக்கிய தனுஷ் வில்லி

'மாட்டிறைச்சி சூப்'பால் சர்ச்சையில் சிக்கிய தனுஷ் வில்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கஜோல் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் போட்டு சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அது மாட்டிறைச்சி அல்ல எருமை மாட்டிறைச்சி என்று விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கஜோல் தனது நண்பர் நடத்தும் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு மாட்டிறைச்சி சூப் சாப்பிட்ட வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு சூப் அருமை என்றார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் கஜோல் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ

வீடியோ

அதெப்படி கஜோல் மாட்டிறைச்சி சாப்பிடலாம் என்று பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதை பார்த்த கஜோல் அந்த வீடியோவை நீக்கிவிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

எருமை

எருமை

நான் சாப்பிட்டது மாட்டிறைச்சி அல்ல அது எருமை மாட்டின் இறைச்சி. அது சட்டப்படி கிடைக்கும் இறைச்சி ஆகும் என விளக்கம் அளித்துள்ளார் கஜோல்.

விளக்கம்

விளக்கம்

பலரின் மத நம்பிக்கையை இது காயப்படுத்தலாம் என்பதால் தான் நான் விளக்கம் அளிக்கிறேன். யார் மனதையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல என தெரிவித்துள்ளார் கஜோல்.

கஜோல்

முஸ்லீம்கள் சாப்பிட்டால் அது மாட்டிறைச்சி. கஜோல் சாப்பிட்டால் அதற்கு பெயர் எருமை மாட்டிறைச்சி என ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Kajol Devgan explained that what she had was not beef but buffalo meat soup.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil