»   »  நான் ஏன் உச்சத்தில் இருந்தபோது இந்தி சிங்கத்தை மணந்தேன்?: நடிகை கஜோல்

நான் ஏன் உச்சத்தில் இருந்தபோது இந்தி சிங்கத்தை மணந்தேன்?: நடிகை கஜோல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்த கஜோல் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நியாசா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர்.

Kajol reveals why she married Ajay at the peak of her career

இந்நிலையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கஜோல் கூறுகையில்,

நான் 8 முதல் 9 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தேன். ஆண்டுக்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இதே போன்று தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை.

திருமணம் செய்து கொண்டு ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்தால் போதும் என முடிவு செய்தேன். அஜய் தேவ்கனை மணந்தேன். வேலையை குறைத்து ரிலாக்ஸாக இருக்க விரும்பினேன் என்றார்.

English summary
Bollywood actress Kajol revealed as to why she married actor Ajay Devgn at the peak of her career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil