twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் தொல்லை குறித்து பேசினால் என்ன நடக்கும் தெரியும்ல?: தனுஷ் வில்லி

    By Siva
    |

    மும்பை: சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து வெளியே சொன்னால் என்னவாகும் என்பது குறித்து பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.

    ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து துணிச்சலாக பேசுவது போன்று பாலிவுட் பிரபலங்கள் செய்வது இல்லை என்ற பேச்சு உள்ளது.

    இந்நிலையில் இது குறித்து நடிகை கஜோல் பேட்டி அளித்துள்ளார். பேட்டின்யின்போது அவர் கூறியதாவது,

    அனைத்து துறைகள்

    அனைத்து துறைகள்

    ஹாலிவுட்டை போன்று பாலியல் தொல்லை குறித்து பேசும் #MeToo இயக்கம் பாலிவுட் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் வர வேண்டும். இது ஒரு துறையின் பிரச்சனை அல்ல. இருப்பினும் பாலிவுட் மட்டும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறிய பிறகு அந்த நபருக்கு என்ன நடக்கும்?

    வெட்கம்

    வெட்கம்

    பாலியல் தொல்லை குறித்து பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெட்கப்படத் தேவையில்லை என்கிறார் கஜோல். பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து வெளிப்படையாக பேசிவிட்டால் தங்களின் கெரியர் நாசமாகிவிடுமோ என்ற பயத்தில் தான் பலரும் வாய் திறப்பது இல்லை என்று சில நடிகைகளே தெரிவித்துள்ளனர்.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    குழந்தைகளை பொறுத்தவரை நான் மிகவும் கண்டிப்பான அம்மா. என் கணவர் அஜய் தேவ்கன் தான் அவர்களுக்கு செல்லம் கொடுப்பார். பெற்றோர்கள் சில சமயங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவரும் புரிந்து கொண்டுள்ளார். நான் ஒரு ஹிட்லர் அம்மா. நான் ஒரு நல்ல நடிகை என்று என் பிள்ளைகள் வாயால் கேட்கும்போது அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை என்கிறார் கஜோல்.

    நடிகை

    நடிகை

    என் மகள் என் வழியில் நடிகையாவாரா என்று கேட்கிறார்கள். அவர் நடிகையாக வேண்டும் என்று தெரிவித்தால் அவரை ஊக்குவிப்பேன். அவருக்கு என்ன பிடிக்குமோ அதை அவர் செய்ய வேண்டும். எனக்காக அவர் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்வு செய்யக் கூடாது. நானும், அஜய்யும் பிரபலங்கள் என்றாலும் எங்கள் குழந்தைகள் பிற குழந்தைகளை போன்று சாதாரணமாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று கஜோல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Bollywood actress Kajol has talked about #Metoo movement. She said, "It's something that needs to be adopted in every industry. It's not the problem of one industry. It's just that Bollywood is in the spotlight that it is expected to speak up. But what happens after you stand up and say that (you faced sexual harassment)? We also need a backup mechanism."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X