»   »  கோலிவுட் நடிகைகளை மிரள வைத்த 'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா

கோலிவுட் நடிகைகளை மிரள வைத்த 'கல்யாணம் முதல் காதல் வரை' ப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016ம் ஆண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகள் பட்டியலில் டிவி சீரியல் நடிகையான பிரியா பவானி சங்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் 2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் ஒரேயொரு டிவி சீரியல் நடிகையின் பெயர் உள்ளது. அவர் தான் ப்ரியா பவானி சங்கர்.

தமன்னா

தமன்னா

நயன்தாராவை அடுத்து 2வது இடத்தில் உள்ளார் தமன்னா. கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் தர்மதுரை, தேவி ஆகிய படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா

சமந்தா

2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலில் சமந்தாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ஏமி ஜாக்சனும், 5வது இடத்தில் ஸ்ருதி ஹாஸனும் உள்ளனர்.

காஜல்

காஜல்

மனம் கவர்ந்த நடிகைகள் பட்டியலில் காஜல் அகர்வாலின் பெயர் 6வது இடத்தில் உள்ளது. கீர்த்தி சுரேஷுக்கு 7வது இடமும், ராதிகா ஆப்தேவுக்கு 8வது இடமும், அனுஷ்காவுக்கு 9வது இடமும், த்ரிஷாவுக்கு 10வது இடமும் கிடைத்துள்ளது.

ப்ரியா

ப்ரியா

கல்யாணம் முதல் காதல் வரை டிவி தொடர் மூலம் பிரபலமான ப்ரியா பவானி சங்கருக்கு மனம் கவர்ந்த நடிகைகள் பட்டியலில் 23வது இடம் கிடைத்துள்ளது. ப்ரியா நடிப்பை விட்டுவிட்டாலும் அவரை மீண்டும் நடிக்க வருமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி?

எப்படி?

ஒரு சீரியல் மூலம் இப்படி பிரபலமா, மனம் கவர்ந்த 25 நடிகைகள் பட்டியலில் இடமா என்று ப்ரியாவை பார்த்து கோலிவுட் நாயகிகள் மிரண்டு போயுள்ளார்கள்.

English summary
Kalyanam Mudhal Kadhal Varai TV serial fame Priya has stunned Kollywood actresses by getting a spot in Chennai Times 25 Most Desirable Women in 2016 list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil