200 கோடி வசூல் சாதனை படைத்த லோகா.. பல ஹீரோக்களின் தூக்கத்தை கெடுத்த கல்யாணி பிரியதர்ஷன்!

திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகின் 4வது 200 கோடி வசூல் படமாக லோகா திரைப்படம் மாறியுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து 13 நாட்கள் தியேட்டர்களில் ரசிகர்களின் அன்பு நிறைந்த காட்சிகளுடன் இந்த சாதனையை லோகா படைத்திருக்கிறது.

துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படமே 100 கோடி அளவில் தான் வசூல் ஈட்டியது. அவரது தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி மாஸ்டர் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் மலையாள திரையுலகத்தை மட்டுமின்றி இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Kalyani Priyadarshan s Lokah Chapter 1 Chandra joins 200 Crore Club
Photo Credit:

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்களிலேயே கூலி படம் தான் அதிக வசூல். அதன் அடுத்த இடத்தில் இருக்கும் குட் பேட் அக்லி படத்தின் வசூலை நெருங்கிவிட்டது லோகா என்பது குறிப்பிடத்தக்கது.

200 கோடி கிளப்பில் லோகா: இந்த ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படம் 250 கோடி வசூலை ஈட்டியது. ஆனால், அந்த படத்தின் பட்ஜெட் 175 கோடி என தகவல்கள் வெளியான நிலையில், லைகாவுக்கு அதிக லாபத்தை அந்த படம் ஈட்டித் தரவில்லை. குறைந்த பட்ஜெட்டில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளத்தில் 200 கோடி வசூலை கடந்தது. துடரும் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 237 கோடி வசூலை இந்த ஆண்டு ஈட்டி மோகன்லாலுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. இந்நிலையில், அந்த வரிசையில் மலையாளத்தில் 4வது 200 கோடி வசூல் படமாகவும் முதல் உமன் சென்ட்ரிக் படமாகவும் மிகப்பெரிய சாதனையை லோகா படைத்துள்ளது.

30 கோடி தான் பட்ஜெட்: முன்னணி நடிகர்கள் அனைத்து மாநிலங்களிலும் 50 கோடி, 100 கோடி, 200 கோடி என சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களை தவிக்கவிட்டு நல்ல படத்தை எடுக்க விடாமல் காலியாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், துல்கர் சல்மான் தயாரிப்பில் வெறும் 30 கோடி பட்ஜெட்டில் உருவான லோகா திரைப்படம் அதிரடியாக 200 கோடி வசூலை கடந்துள்ளது.

லோகா பார்ட் 2 சாதனை படைக்கும்: டோமினிக் அருண் லோகா படத்தை போலவே அதன் 2ம் பாகத்தையும் தரமான சம்பவமாக செய்தால், நிச்சயம் புஷ்பா 2 மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது போல லோகாவும் மலையாள திரையுலகின் முதல் 500 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் படமாக மாறும் என்றும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

பல நடிகர்களின் தூக்கம் போச்சு: பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுத்து வரும் பல முன்னணி நடிகர்கள் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி 100 கோடி கூட வசூல் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், கல்யாணி பிரியதர்ஷனின் படம் 200 கோடி வசூல் செய்துள்ள நிலையில், பால் நடிகர்களின் தூக்கமே போச்சு என்றும் சிலர், டோமினிக் அருணுக்கு போன் செய்து தனக்கு ஏதாவது கதை இருக்கா? என்றும் லோகா அடுத்த பாகத்தில் தனக்கு ஒரு ரோல் ரெடி பண்ணவும் கேட்டு வருகின்றனர். இதில், சில நடிகைகள் கூட அடங்குவர் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X