Lokah: நயன்தாரா, அனுஷ்கா எல்லாம் இல்லை.. அதிரடி காட்டி 100 கோடி கிளப்பில் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்!

திருவனந்தபுரம்: பாலிவுட் முதல் கோலிவுட் வரை பெண்களுக்கு பெரிய சம்பளத்தை கொடுக்க மாட்டேங்கிறாங்க என்கிற வருத்தமும் கோபமும் பல முன்னணி நடிகைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பொறுத்துதான் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சம்பள உயர்வு இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்ட நயன்தாரா ஏகப்பட்ட உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வெற்றிக் கொடுத்தாலும் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை கொடுக்கவில்லை. நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா உள்ளிட்ட பலரும் சோலோவாக படங்களில் நடித்தும் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தும் 100 கோடி கிளப்பில் ஒருமுறை கூட இணையவில்லை.

Kalyani Priyadarshan s Lokah Chapter 1 Chandra will enter 100 Crore club by today
Photo Credit:

இந்நிலையில், லீடு ரோலில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம் அதிரடியாக உலகளவில் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அனுஷ்கா அப்பவே அட்டகாசம்: அருந்ததி திரைப்படம் அனுஷ்காவுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படத்தை கொடுத்தது. 2009ம் ஆண்டு வெளியான அந்த படம் 68.5 கோடி ரூபாய் வசூலை கொடுத்ததாகவும் பாகமதி திரைப்படம் 64 கோடி ரூபாய் வசூலையும், ருத்ரமாதேவி திரைப்படம் 82 கோடி ரூபாய் வசூலை கொடுத்ததாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அந்த படங்கள் எல்லாம் இப்போது வந்திருந்தால் 100 கோடி வசூலை எல்லாம் கடந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kalyani Priyadarshan s Lokah Chapter 1 Chandra will enter 100 Crore club by today
Photo Credit:

நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ்: சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகர் திலகம் படத்தில் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்தாலும், லீடு ரோலில் கீர்த்தி சுரேஷ் தான் நடித்திருந்தார். அந்த படம் அதிகபட்சமாக 84 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால், அதன் பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த உமன் சென்ட்ரிக் படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை பெறவில்லை.

நயன்தாரா அடி தூள்: மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் அதிகபட்சமாக 73 கோடி ரூபாய் வசூல் அள்ளியதாக தகவல்கள் உள்ளன. இத்தனைக்கும் அந்த படம் வெறும் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வரும் நிலையில், கூடிய சீக்கிரமே 200 கோடி கிளப்பில் கூட நயன்தாரா இணைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 கோடி கிளப்பில் கல்யாணி பிரியதர்ஷன்: பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலர் 100 கோடி கிளப்பில் உள்ளனர். அரண்மனை 4 படத்தின் மூலம் தமன்னா 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், தற்போது கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் 6 நாட்களில் இதுவரை 93 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 7வது நாளான இன்றைய முடிவில் லோகா திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லால், மாளவிகா மோகனன் நடித்த ஹிருதயப்பூர்வம் திரைப்படம் இதுவரை 50 கோடி வசூலை உலகளவில் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X