»   »  நான் ஹீல்ஸ் போட்டா அப்பாக்கு பிடிக்காது… ஸ்ருதிஹாசன்

நான் ஹீல்ஸ் போட்டா அப்பாக்கு பிடிக்காது… ஸ்ருதிஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டால் அப்பாவை விட உயரமாக இருப்பேன். இதனால் நான் ஹீல்ஸ் போடுவதை அப்பா விரும்ப மாட்டார். என் பக்கத்தில் கூட நடந்து வரமாட்டார் என்று கூறியுள்ளார் அவரது மகள் ஸ்ருதிஹாசன்.

தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘ரமணா' படம் இந்தியில் ‘கப்பார் இஸ் பேக்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு இன்று (வெள்ளிகிழமை) திரைக்கு வந்துள்ளது.

அக்சய்குமார், ஸ்ருதிஹாசன், கரீனா கபூர், பிரகாஷ்ராஜ், சுமன் தல்வார், மற்றும் பலர் நடித்துள்ள ‘கப்பார் இஸ் பேக்' திரைப்படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன் தனது தந்தையைப் பற்றியும், தான் போடும் குதிகால் உயர செருப்பைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

நான் உயரமாக்கும்

நான் உயரமாக்கும்

பட ப்ரமோசன் நிகழ்ச்சியில் குதிகால் உயர செருப்பு அணிந்து அசால்டாக நடந்து வந்தார் ஸ்ருதிஹாசன். இதனை ஹீரோ அக்ஷய் குமார் உட்பட அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஸ்ருதி, தன்னுடைய உயரம் 5 அடி 7 அங்குலம் என்று கூறினார்.

அப்பாவுக்கு பிடிக்காது

அப்பாவுக்கு பிடிக்காது

தன்னுடைய உயரம் தனக்கு ப்ளஸ் பாயிண்ட் என்று கூறிய ஸ்ருதி, தன்னுடைய தந்தைக்கு ஹீல்ஸ் போட்டு நான் உயரமாக இருப்பது பிடிக்காது என்று கூறினார். என் பக்கத்தில் நடந்து வரக்கூடாது என்று கூறிவிடுவார் என்றும் ஸ்ருதி கூறினார்.

மசாலா படமா?

மசாலா படமா?

கப்பார் இஸ் பேக் படம் ஒரு மசாலா படம் என ஒரு சில ஊடகங்கள் விமர்சனம் செய்ததற்கு பதிலடி தரும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். இந்தப் படத்தை மசாலா படம் என்று ஏன் கூறுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இது ஒரு சமூக கருத்தை வலியுறுத்தும் அழுத்தமான பொழுதுபோக்கு திரைப்படம் ஆகும். ஒரு வெற்றி படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் அடங்கியுள்ளது' என்று கூறியுள்ளார்.

கரீனா சூப்பர்

கரீனா சூப்பர்

இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ள கரீனா கபூர் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘கரினாவின் பகுதி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் கதைக்கு மிக முக்கியமான பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அவருடைய நடிப்பை என்னை மிகவும் கவர்ந்தது' என்றும் ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Akshay Kumar and Shruti Haasan, who were promoting their Friday release Gabbar Is Back, were walking into a suburban five-star hotel in Mumbai yesterday.
Please Wait while comments are loading...