»   »  சேரன்-கமலினியின் பிரிவோம், சந்திப்போம்

சேரன்-கமலினியின் பிரிவோம், சந்திப்போம்

Subscribe to Oneindia Tamil

சேரன், கமலினி முகர்ஜியை வைத்து அழகான காதல் கதையை சொல்ல வருகிறார் கரு. பழனியப்பன்.

சேரன் ஹீேராவாக அறிமுகமான படம் சொல்ல மறந்த கதை. அப்படத்தை இயக்கியவர் தங்கர் பச்சான். அதற்குப் பிறகு ஆட்டோகிராப் படத்திலும் நாயகனாக நடித்தார் சேரன். ஆனால், அப்படத்தை அவரேதான் இயக்கினார்.

இதைத் தொடர்ந்து மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து என இரு படங்களில் நாயகனாக நடித்துள்ளார் சேரன். இரண்டில் மாயக்கண்ணாடி விரைவில் வரப் போகிறது. ஆடும் கூத்து என்ன ஆச்சு என்று தெரியவில்லை.

பழங்கதை மறப்போம். பிரிவோம், சந்திப்போம் குறித்து இப்போது பேசுேவாம்.

எழுத்தாளர் சுஜாதாவின் கதைதான் இந்த பிரிவோம் சந்திப்போம். தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு புதுக் கதை புனைந்துள்ளார் இயக்குநர் கரு. பழனியப்பன்.

இப்படத்தில் வெறும் கதை நாயகனாக மட்டும் வருகிறார் சேரன். அவருடன் ஜோடி போடுகிறார் கமலின் நாயகியான கமலினி முகர்ஜி. வித்யாசாகர் இசையமைக்கிறார். சுபாஷ்கரன் படத்தை தயாரிக்கிறார்.

சிவப்பதிகாரத்தைத் தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பழனியப்பனின் படங்களில் ஒரு விசேஷம் இருக்கும். அதாவது கற்பனையை மீறிய யதார்த்தம் படம் முழுக்க பயணிப்பதைப் பார்க்கலாம்.

பார்த்திபன் கனவாகட்டும், சிவப்பதிகாரம் ஆகட்டும் அவரது படங்களில் இயல்புக்கு எப்ேபாதும் பங்கம் வந்ததில்லை. இயல்பின் கற்பு கலையாமல் கற்பனையில் தேன் தடவி நமக்குக் கொடுத்திருப்பார்.

கரு. பழனியப்பனின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள சதுரங்கம் படம் இன்னும் வெளி வராமல் உறங்கிக் கிடக்கிறது. இதிலும் அற்புத இயக்கத்தைக் கொடுத்திருப்பார் கரு என்று நம்பலாம். சீக்கிரம் வர வாழ்த்துேவாம்.

பிரிவோம் சந்திப்போம் படமும் ஒரு இயல்பான காதல் கதைதான் என்கிறார் கரு. பழனியப்பன். படபூஜை நேற்று சிறப்பாக நடந்தது. பூஜையை முடித்து விட்டு வந்த கருவை ஓரம் கட்டி கதை கேட்டோம்.

சுஜாதா சாரின் பிரிவோம் சந்திப்போம் நாவல் எல்லோரையும் போல என்னையும் கவர்ந்தது. பலமுறை அதைப் படித்துள்ளேன். ஆனால் எனது பிரிவோம் சந்திப்போம் படமும், சுஜாதாவின் கதையும் வித்தியாசமானவை. ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை.

நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் ெகாண்ட காதல் கதை இது. இந்தக் கதைக்கு சேரன் மட்டுமே பொருத்தமாக இருப்பார். அதனால்தான் அவரை நாயகனாக்கினேன்.

இந்தப் படத்தைப் பார்க்கப் போகும் ஒவ்ெவாரு இளைஞனும் காதலில் விழப் போவது உறுதி. அப்படி ஒரு ஈர்ப்பு இப்படத்தில் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் மூலம் நான் கொடுக்கப் போகும் செய்தியே, வாருங்கள், காதலில் வீழுங்கள் என்பதுதான்.

சிவப்பதிகாரம் படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்படத்தில் எந்தத் தவறும் செய்திருப்பதாக நான் நினைக்கவில்லை. பி, சி சென்டர்களில் படம் நன்றாகத்தான் போனது.

சதுரங்கம் படம் குறித்து என்னிடம் கேட்டால் அதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை என்று சிம்பிளாக முடித்துக் ெகாண்டார் கரு.

கதையின் கருைவ, கரு, பழனியப்பன் சொல்கிற விதத்திலேயே இந்தப் படம் இன்னும் ஒரு காதல் தென்றல் எனப் புரிய வருகிறது. சீக்கிரம் தென்றல் வீசட்டும், இன்னும் காதல் உணர்வை உணராத இளசுகள், மூழ்கி முத்தெடுக்கட்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil