»   »  மலையாளினி முகர்ஜி!

மலையாளினி முகர்ஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுத்தமான மலையாள நடிகையாகி விட்டார் கமலினி முகர்ஜி.

கொல்கத்தாவிலிருந்து கோலிவுட்டுக்கு கெளதம் மேனன் கூட்டி வந்து கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்க வைத்த கமலினி முகர்ஜி தமிழை விட மலையாளத்துக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளாராம்.

நடிக்க வந்த முதல் படத்திலேயே கமலுடன் இணைந்து நடித்ததால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளானார் கமலினி. பிரமாதம் என்று கூறும் அளவுக்கு நடிப்பிலும் கலக்கினார். ஆனால் அடுத்தடுத்து தமிழில் அவருக்குப் படங்கள்தான் வரவில்லை.

சமீபத்தில்தான் சேரனுடன் ஜோடியாக நடிக்கும் பிரிவோம் சந்திப்போம் பட வாய்ப்பு வந்தது. ஆனாலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறதா என்றே சந்தேகமாக உள்ளது.

இந்த நிலையில்தான் மலையாளத்தில் கமலினி நடித்த கிளாஸ்மேட்ஸ் சூப்பர் ஹிட் படமானது. இதையடுத்து கமலினிக்கு மலையாளத்தில் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. மேலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளாம்.

தமிழில் இலவு காத்த கிளி போல காத்துக் கிடப்பதற்கு மலையாளத்தில் வருகிற வாய்ப்புகளில் நடிக்கலாமே என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் கமலினி.

இதையடுத்து தமிழை விட மலையாளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளாராம் கமலினி. தமிழில் புதிய படங்கள் வந்தால் நடிப்பாராம்.

அப்ப இனிமேல் கமலினியை, கமலையாளினி என்றே கூப்பிடலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil