»   »  ரவிகிருஷ்ணாவுக்கு கமலினி

ரவிகிருஷ்ணாவுக்கு கமலினி

Posted By:
Subscribe to Oneindia Tamil


கமலுடன் நடித்த கமலினி முகர்ஜி ரவிகிருஷ்ணாவுடன் ஜோடி சேருகிறார்.

Click here for more images

கமலுடன், வேட்டையாடு விளையாடு படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக வந்து கலக்கியவர் கமலினி முகர்ஜி. இவருடைய நடிப்பை பார்த்து நான், நீ எனப் போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்பு வந்தது.

ஆனால் கமலினியோ, எல்லா படத்திலேயும் நடிக்க மாட்டேன், செலக்டிவ்வாகத்தான் நடிப்பேன் என்று கூறி வந்த வாய்ப்புகளையெல்லாம் வடி கட்டிக் கொண்டிருந்தார்.

பிரிவோம் சந்திப்போம் படத்தில் சேரனுக்கு ஜோடியாக போட்டு நடிக்க வைத்தார் இயக்குநர் கரு.பழனியப்பன். ஆனால் நடித்த வரை போட்டுப் பார்த்தபோது, திருப்தி வரவில்லை இயக்குநருக்கும், சேரனுக்கும். இதையடுத்து படத்திலிருந்து கழற்றி விட்டு விட்டனர்.

இந்த நிலையில் ஏ.எம்.ரத்னம் மகனும், நடிகருமான ரவிகிருஷ்ணா நடிக்கும் நீ ஓட நான் துரத்த படத்தில் கமலினி நடிக்கிறார். தருண் கோபி இப்படத்தை இயக்குகிறார்.

பீமா படத்தை முடித்து விட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் விழி பிதுங்கிக் கிடக்கும் ரத்னம், அந்த துயரத்தை ஓரம் கட்டி வைத்து விட்டு மகனுக்கு புது வழி காட்ட நீ ஓட நான் துரத்த படத்திற்கு வருகிறார்.

கமலுடன் நடித்த கமலினி இப்போது ரவி கிருஷ்ணா ரேஞ்சுக்கு இறங்கி வந்திருப்பதை கோலிவுட் ஆச்சரியப் பார்வை பார்த்துள்ளது.

Read more about: kamalinimukherji ravikrishna

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil