»   »  காத்திருக்கும் காம்னா

காத்திருக்கும் காம்னா

Subscribe to Oneindia Tamil

வலுவான மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல செமத்தியான வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருக்கிறாராம் காம்னா.

இதயத் திருடன் மூலம் அறிமுகமாகி கிளாமரால் ரசிகர்களைக் கவர்ந்தவர் காம்னா. நடிப்புக்கேற்ற உடல் வாகு இல்லாவிட்டாலும் கூட, கிளாமருக்கேற்ற தோதில் இருந்தும் கூட காம்னாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்து விடவில்லை.

இடையில், பட வாய்ப்புகள் குறைந்ததால் விளம்பரங்களில் வந்து போனார் காம்னா. இந்த நிலையில் தற்போது ஜீவனுடன் நடித்து வரும் மச்சக்காரன் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் காம்னா.

ஜீவன் பெரிய மச்சக்காரர்தான். படம் முழுக்க காம்னாவின் கிளாமர் கரைபுரண்டோடியுள்ளதாம். இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று வைரமுத்து போல காம்னாவிடம் கேட்டோம்.

அதற்கு அவர், இதயத்திருடனுக்கு பின் எனக்கு தமிழ், தெலுங்கு படத்தில் நிறைய படங்கள் வந்தது. ஆனால் எந்த படத்தின் கதையும் எனக்கு பிடிக்கவில்லை.

மச்சக்காரனில் ஜீவனுடன் நடித்து வருகிறேன். படத்தின் கதை எனக்கு பிடித்து இருந்ததால் நடிக்க ஒத்துக்கொண்டேன். நல்ல கதை கிடைத்தால் நான் நிச்சயம் நடிப்பேன்.

எனக்கு சம்பளம் முக்கியமில்லை. நல்ல கதை கிடைக்க வேண்டும். அதுவரை வாய்ப்புக்காக காத்திருப்பதற்கு நான் தயங்க மாட்டேன் என்கிறார் காம்னா.

காத்திருப்பதில் தவறில்லை, காலங்கள்தான் போய் விடக் கூடாது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil