»   »  காம்னா.. இன்னொரு தேவதை

காம்னா.. இன்னொரு தேவதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் முன்னணி கிரிமினல் லாயர் ராம் ஜேத்மலானியின் பேத்தி நடிக்க வருகிறார். அதுவும் தமிழில்.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடி சேருகிறார்.

தொடர்ந்து தனது தந்தை எடிட்டர் மோகனின் படக் கம்பெனியிலேயே நடித்து வந்த ரவியை தனது மழை படம் மூலம் வெளியேகொண்டு வந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதையடுத்து மளமளவென வெளிப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ரவி.

ரவி நடிக்கும் தாஸ் படத்தை லட்சுமி மூவிமேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்து கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம்தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் ரவி.

தாஸ் படத்தை பாபு யோகேஸ்வரன் டைரக்ட் செய்கிறார். நெல்லை, மதுரை ஆகிய 2 மாவட்டங்களை மையமாக வைத்து ஒருகாதல் கதையை ஆக்ஷன் கலந்து எடுக்கிறார்களாம்.

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் காதல் ஏற்படுத்தும் அதிர்வு அலைகள் தான் கதையின் கருவாம்.

இந்தப் படத்தில் ரவிக்கு ஜோடியாக நடிப்பது மலையாள குஜிலியான ரேணுகா மேனன். கோபிகாவைப் போலவே இவருக்கும்திருச்சூர் தாந் சொந்த ஊர்.

வழக்கம்போல கேரளா எக்ஸ்பிரசில் புறப்பட்டு கன்னடம், தெலுங்கு என ஒரு ரவுண்டு அடித்து விட்டு கோடம்பாக்கத்தில்லேண்டாகி விட்டார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ரவி நடிக்கப் போகும் படம் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் "இதயத் திருடன்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கப் போவது த கிரேட் சரண்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காம்னா என்ற பிரபல மும்பை மாடல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார். இப்போதுதெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் காம்னா, ராம் ஜேத்மலானியின் பேத்தி.

நான் வடக்கத்திப் பெண் என்றாலும் என்னைப் பார்த்தால் பலரும் தென்னிந்தியப் பெண்ணா என்று தான் கேட்கிறார்கள். இதனால்நான் தமிழ் படங்களில் அன்னியமாகத் தெரிய மாட்டேன் என்று தனக்குத் தானே மார்க் போட்டுக் கொள்கிறார் காம்னா.

வேகமாக தமிழும் கற்க ஆரம்பித்திருக்கும் காம்னாவுக்கு தெலுங்கை விட தமிழ் பிடிக்குமாம். காரணம், தமிழில் சொல்லப்படும்வித்தியாசமான கதைகள். தெலுங்கிலும் நிறைய ஆபர்கள் வர ஆரம்பித்துள்ள நிலையில் தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை கப் எனபிடித்துக் கொண்டிருக்கிறார்.

மிஸ் மும்பை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இவர், மாடலிங்கில் சிறிது காலம் கழித்துவிட்டே சினிமாவுக்குவந்திருக்கிறார்.

மியூசிக் சேனல்களில் கொஞ்ச காலம் கம்பியருங் செய்த அனுபவமும் உள்ள காம்னா மியூசிக் ஆல்பங்களிலும் ஆடிப் பாடிநடித்திருக்கிறார் காம்னா.

நடிப்பதோடு தேவைப்படும் அளவுக்கு கிளாமர் ரோல்கள் செய்யவும் தயாராம்.

சரண் இயக்கும் இந்தப் படத்தில் ரவியை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒரு குதூகலப் பெண் கேரக்டரில் நடிக்கிறார் காம்னா.

இந்த இதயத் திருடன் படத்தின் பாடல்களை வைரமுத்து செதுக்கியிருக்கிறார். இசை பரத்வாஜ். பாடல் பதிவை ஹங்கேரியில்போய் செய்யப் போகிறார்களாம். படத்தின் பெரும்பாலான சூட்டிங் நடக்கப் போவது பெங்களூரில்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil