»   »  தாம் தூம் கங்கனா

தாம் தூம் கங்கனா

Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டை தனது கிளாமரால் கலங்கடித்து வரும் கங்கனா ரனாத் தமிழுக்கு வருகிறார். இயக்குனர்-கம்-கேமராமேன் ஜீவா இயக்கும் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடி போடப் போகிறார்.

இதில் முதலில் நடித்தது ரீமா சென் தான். ஆனால், என்ன பிரச்சனை நடந்ததோ பாதியிலேயே கழன்று கொண்டுவிட்டார் ரீமா.இதையடுத்து ஹீரோயின் தேடல் நடந்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல இடங்களில் நடந்த நீண்ட கால தேடலுக்குப் பின் சிக்கியவர் தான் கங்கனா.

கங்கனா தான் ஹீரோயின் என்றதும் உடனடியாக தலையாட்டிவிட்டாராம் ஹீரோ ஜெயம் ரவி. அதே போல அவரது அப்பா எடிட்டர் மோகனும் ஓ.கே. சொன்ன பிறகே கங்கனா இறுதி செய்யப்பட்டாராம்.

இந்தியில் இதுவரை நான்கே படங்களில் தான் நடித்திருக்கிறார் கங்கனா. அதில் இவர் நடித்த படமான ெமட்ரோ இனிமேல் தான் ரிலீஸாகவே போகிறது.

ஆனாலும் அதற்குள்ளாகேவ இவரது கிளாமரும், போஸ்களும் சினிமாவைத் தாண்டி பத்திரிக்கைகளை நிரப்ப ஆரம்பித்துவிட்டன. மேலும் மாடலிங்கிலும் பிய்ச்சு மேய்ந்து வரும் கங்கனா தான் உலகப் புகழ் பெற்ற ரெட் டேப் ஷூக்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக ஏகப்பட்ட பணம் கங்கனாவிடம் திணிக்கப்பட்டுள்ளதாம்.

ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான கங்கனா வளர்ந்த இடம் டெல்லி. சினிமாவில் நடிக்க கடும் முயற்சிகள் எடுத்தே வென்றிருக்கிறார். முதல் படம் கேங்க்ஸ்டர். அதில் கங்கனா காட்டிய கவர்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருந்ததால் அடுத்தடுத்து வோ லம்ஹே, சக்கலக்க பூம் பூம் உள்ளிட்ட படங்கள் தேடி வந்துவிட்டன.

கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை விருதையும் வென்றவர் கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil