»   »  நடிகைகள் கங்கனா, தீபிகா இடையே சண்டை ஆனால் இல்லை

நடிகைகள் கங்கனா, தீபிகா இடையே சண்டை ஆனால் இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத்துக்கும், தீபிகா படுகோனேவுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

பாலிவுட்டில் இந்த நடிகைக்கு அந்த நடிகையை பிடிக்காது, அவருக்கு இவரை பிடிக்காது என்று ஒரு பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும். அந்த பட்டியலில் சேர்ந்துள்ளவர்கள் கங்கனா ரனாவத் மற்றும் தீபிகா படுகோனே.

கங்கனாவுக்கும், தீபிகாவுக்கும் இடையே அண்மையில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

விருது விழா

விருது விழா

க்வீன் படத்திற்காக கங்கனா விருதுகளை வாங்கி குவித்தபோது நடந்த விருது விழா ஒன்றில் சிறந்த நடிகைக்கான விருதை தீபிகா பெற்றார். அந்த விருதை க்வீன் படத்தில் அருமையாக நடித்ததற்காக கங்கனாவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

தீபிகா

தீபிகா

பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான், அமிதாப் உள்ளிட்டோர் தன்னை அழைத்து பேசுவதாகவும் ஆனால் தீபிகா கண்டுகொள்ளவில்லை என்றும் கங்கனா தெரிவித்தார். இதையடுத்து தீபிகா கங்கனாவை அழைத்து பேசியும் பிரச்சனை தீரவில்லை போன்று.

பிக்கு

பிக்கு

அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடித்த பிக்கு படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதையடுத்து தீபிகா அளித்த வெற்றி பார்ட்டியில் கங்கனா கலந்து கொண்டார். ஆனால் அவரும், தீபிகாவும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை.

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்

தான், மாதவனுடன் சேர்ந்து நடித்த தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் ஹிட்டானதை கொண்டாட கங்கனா பார்ட்டி கொடுத்தார். பார்ட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் தீபிகா வரவில்லை.

கங்கனா

கங்கனா

தீபிகா பார்ட்டிக்கு வராதது பற்றி கங்கனா கூறுகையில், நான் தீபிகாவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் பார்ட்டிக்கு வரவில்லை. நான் சக நடிகர், நடிகைகளை ஆதரிக்கிறேன். அதே ஆதரவை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். ஆதரவு கிடைக்கவில்லை எனில் கஷ்டமாக உள்ளது என்றார் கங்கனா.

English summary
Bollywood beauties Kangana Ranaut and Deepika Padukone are reportedly not in talking terms.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil