»   »  'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?

'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னுடன் நடிக்க மறுத்த ஷாருக்கானுடன் சேர்ந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் கங்கனா ரனாவத்.

பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கானுடன் நடிக்க அனைத்து நடிகைகளும் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் மூன்று கான்களுடனும் நடிக்க வந்த வாய்ப்புகளை உதறித் தள்ளியுள்ளார் கங்கனா ரனாவத்.

எனக்கு கான்களுடன் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார் கங்கனா.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஆனந்த் எல். ராய் ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். அதில் ஷாருக்கிற்கு ஜோடியாக நடிக்க கங்கனாவிடம் கேட்க அவர் முடியாது என்று கூறிவிட்டாராம்.

கங்கனா

கங்கனா

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் கங்கனாவுடன் நடிக்க ஷாருக்கான் மறுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஷாருக்கானை பழிவாங்குவது போன்று அவர் படத்தில் நடிக்க கங்கனா மறுத்துள்ளார்.

சுல்தான்

சுல்தான்

சல்மான் கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான சுல்தான் படத்தில் நடிக்க முதலில் கங்கனாவிடம் தான் கேட்டுள்ளார்கள். தனது கதாபாத்திரம் வெயிட்டாக இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். இதனால் சல்மான் கங்கனா மீது கோபம் அடைந்தார்.

ஆமீர் கான்

ஆமீர் கான்

ஆமீர் கானின் சூப்பர் ஹிட் படமான தங்கலில் நடிக்கும் வாய்ப்பு கங்கனாவுக்கு வந்தது. அதிலும் கதாபாத்திரம் சரியில்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார் கங்கனா.

English summary
According to reports, Kangana Ranaut has reportedly refused to act with Shah Rukh Khan in his upcoming movie to be directed by Anand L Rai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil