»   »  விரட்டப்பட்ட கங்கனா

விரட்டப்பட்ட கங்கனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

குண்டக்க மண்டக்க தொலைபேசியில் பேசி பில்லக் குவித்ததாக கூறி நடிகை கங்கனா ரணவத்தை ஹோட்டலிலிருந்து வெளியேறுமாறு நட்சத்திர கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கூறியதால் கங்கனா கடுப்பாகி விட்டார்.

வங்கத்து வண்ணக்கிளி கங்கனா ரணவத். தாம்தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த நட்சத்திர கலை நிகழ்ச்சிக்குப் போயிருந்தார் கங்கனா.

இதில் பங்கேற்பதற்காக ஒரு கணிசமான தொகையயும், கூடவே டிரஸ்ஸுக்காக 47 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுப்பதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியிருந்தனர். இதையடுத்தே நியூயார்க் சென்றார் கங்கனா.

அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார் கங்கனா. பேசியபடி ஆடைகளுக்கான பணத்தைக் கொடுக்காமல் டபாய்த்துள்ளனர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். இதனால் கோபமான கங்கனா, பணம் என்னாச்சு என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையே, அதனால் பணம் தர முடியாது என்று கூறி விட்டனராம்.

கடுப்பாகிப் போன கங்கனா கடுமையாக வாதிட்டுள்ளார். இதையடுத்து ஒரு வழியாக பணத்தைக் கொடுத்துள்ளனர். இப்படியாக களேபரத்துடன் கலை நிகழ்ச்சியும் முடிந்தது. இந்த நிலையில், கங்கனா, தான் தங்கியிருந்த ஹோட்டல் போனிலிருந்து ரூ. 40 ஆயிரம் வரைக்கும் போன் பேசியுள்ளதாக ஹோட்டல்காரர்கள் பில்லைத் தூக்கி நீட்டி பணம் ப்ளீஸ் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களை அணத்தியுள்ளனர்.

அதிர்ச்சியாகிப் போன ஏற்பாட்டாளர்கள், கங்கனாவை உடனடியாக ஹோட்டலை விட்டு வெளியேறுமாறு கூறினர். அவரும் படு கூலாக அறையைக் காலி செய்து விட்டு, அதே ஹோட்டலில் வேறு அறையில் தங்கியிருந்த உறவினருடன் தங்கிக் கொண்டாராம். அந்த உறவினர் கங்கனாவின் அத்தையாம்.

இந்த பஞ்சாயத்து குறித்து கங்கனாவின் மேலாளர் கூறுகையில்,

முதலில் ஆடைகளுக்கு பணம் தருவதாக கூறியிருந்தனர். அதை பின்னர் தர முடியாது என்று கூறி விட்டனர். பலமுறை கேட்ட பின்னர்தான் பணத்தைக் கொடுத்தனர்.

இந்தக் கடுப்பில்தான் கங்கனா அதிக தொகைக்கு போன் பேசியதாக கூறி அவரை அறையை விட்டு வெளியேற்றி அவமானப்படுத்தி விட்டனர் என்றார்.

அடப் பாவமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil