»   »  பாலிவுட் குயினுக்கு 29 வயசாச்சு

பாலிவுட் குயினுக்கு 29 வயசாச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி நடிகை கங்கனா ரனாவத் இன்று தனது 29 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

தமிழில் தாம் தூம் படத்தில் லூசுப் பெண்ணாக நடித்த கங்கனா இன்று பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின்களில் ஒருவர்.

பெயர், புகழ், ஏகப்பட்ட விருதுகள் என்று பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் கங்கனாவைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இமாச்சல் பிரதேசம்

இமாச்சல் பிரதேசம்

ஆப்பிளுக்குப் பெயர் போன இமாச்சலப் பிரதேசத்தில் 1987 ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி கங்கனா ரனாவத் பிறந்தார். அப்பா தொழிலதிபர், அம்மா பள்ளி ஆசிரியை என்றாலும் கங்கனாவிற்கு பிடித்ததென்னவோ மாடலிங் தான். மாடலிங் துறையில் அசத்திக் கொண்டிருந்தவருக்கு பாலிவுட் வாய்ப்பு தேடி வந்தது.

கேங்க்ஸ்டர்

கேங்க்ஸ்டர்

இம்ரான் காஷ்மியுடன் இணைந்து நடித்த கேங்க்ஸ்டர் பாலிவுட்டில் நல்லதொரு அறிமுகத்தை, கங்கனாவிற்கு பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை விருதையும் இவர் கைப்பற்றினார். வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

30 படங்கள்

30 படங்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இதுவரை 30 படங்கள் நடித்திருக்கிறார். இதில் பேஷன், தனு வெட்ஸ் மனு, குயின், தனு வெட்ஸ் மனு 2, கிரிஷ் 3 படங்கள் கங்கனாவிற்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்த படங்கள்.

2 தேசிய விருதுகள்

2 தேசிய விருதுகள்

குயின் மற்றும் பேஷன் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியதற்காக 2 தேசிய விருதுகளை வென்றுள்ளார். தேசிய விருதுகள் உட்பட 27 விருதுகளை கங்கனா கைப்பற்றியிருக்கிறார்.

ரங்கூன்

ரங்கூன்

தற்போது நடித்து வரும் ரங்கூன் இவரின் 30 வது படமாகும். இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இவரின் பெயரும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு படத்திற்கு 15 கோடிகள் வரை வாங்குவதாகக் கேள்வி.

ஹிருத்திக்ரோஷன்

ஹிருத்திக்ரோஷன்

ஹிருத்திக்ரோஷன் - கங்கனா ரனாவத் காதல் மற்றும் மோதல் பாலிவுட்டில் மிகப் பிரபலமான விஷயமாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக இருவரும் ஒருவருக்கொருவர் வக்கீல் நோட்டிஸ் விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதை விடவும் கங்கனாவை மன நோயாளி என்று ஹிருத்திக் அறிக்கை விட்டது மற்றும் வக்கீல் நோட்டிஸ் ஆகியவை தான் தற்போதைய பாலிவுட்டின் ஹாட் டாக்.

எவ்வளவு சர்ச்சைகள், காதல்கள் வந்தாலும் இன்னும் பாலிவுட் குயினாக கங்கனா நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கங்கனா!

English summary
Kangana Ranaut turns 29. The small-town girl, who is known for her straight forward answers, is one of the top actresses in Bollywood currently and looking at her success, nobody can say that the diva was initially criticised for her acting and looks. Lets look at the long list of her love affairs and lesser known facts about her love life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil