»   »  கறக்கும் கனிகா!

கறக்கும் கனிகா!

Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட, நகைக் கடை திறப்பு, ஜவுளிக் கடை திறப்பு என குட்டி குட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்லாப் பெட்டியை நிரப்பி வருகிறாராம் கனிகா.

மதுரை தந்த முத்துப் பெண் கனிகா. பைவ் ஸ்டார் படம் மூலம் நடிகையான கனிகா, அந்தப் படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் அதன் பின்னர் கனிகா நிறையப் படங்களில் நடிக்கவில்லை.

மாறாக படிக்கப் போய் விட்டார். இடையில் கிடைத்த விடுமுறையில்தான் நடித்து வந்தார். வரலாறு படத்தில் அவரது வயது முதிர்ந்த கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து சில பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் மறுபடியும் படிப்பு குறுக்கிட்டதால் நடிக்கவில்லை கனிகா.

இப்போது சரத்குமார், மம்முட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் மலையாளப் படமான பழசிராஜாவில் மம்முட்டியின் ஜோடியாக, ராணி வேடத்தில் நடித்து வருகிறார் கனிகா.

கனிகாவிடம் பட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கவில்லை. ஆனாலும் அம்மணியின் கல்லாப் பெட்டி மட்டும் படு வேகமாக நிரம்பி வருகிறதாம். என்னடா என்று பார்த்தால் நகைக் கடை திறப்பு, ஜவுளிக் கடை திறப்பு, காம்பியரிங் என்று குட்டி குட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்லாக் கட்டி வருகிறாராம்.

நல்ல கேரக்டர்கள் கிடைத்தால்தான் நடிப்பேன், சும்மா வந்து போகும் படங்கள் எனக்குத் தேவையில்லை என்கிறார் கனிகா. பழசிராஜா தனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் என்றும் நம்புகிறார் கனிகா.

இப்போது நடித்து வரும் படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் கூட, நல்ல கேரக்டர்கள் கிடைத்தால்தான் தொடர்ந்து நடிப்பேன் என்றும் பிடிவாதமாக கூறுகிறார் கனிகா.

Please Wait while comments are loading...