'முட்டாள், மக்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாதா'- என்ஜீனியரை திட்டிய நடிகை ரம்யா!

By Sudha

ஸ்ரீரங்கப்பட்டனா: மாண்டியா தொகுதியிலிருந்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற நடிகை ரம்யா, நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஜில்லா பரிஷத் பொறியாளரை முட்டாள் என்று கூறித் திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியிலிரு்நது லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா ஸ்பந்தனா. இவர் தனது தொகுதிக்குட்பட்ட கனகனூர் கிராமத்தில் விஜயம் செய்து மக்களிடம் குறை கேட்டார்.

Kannada Actress Ramya calls ZP engineer, 'Stupid'!

அப்போது அங்குள்ள இந்திராநகர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களது பகுதிக்கு குடிநீர் விநியோகம் சரிவர இல்லை என்றும் இருக்கும் ஒரே ஒரு குழாயும் பழுதுபட்டிருப்பதாகவும் குறை கூறினர்.

இதைக் கேட்டுக் கோபமடைந்த ரம்யா அருகில் நின்றிருந்த மாண்டியா ஜில்லா பஞ்சாயத்து, உதவி செயள் பொறியாளர் ஹனுமந்தயா பக்கம் திரும்பி, விளக்கம் கேட்டார். அவரும் விளக்கம் அளித்தார். ஆனால் அதில் திருப்தி அடையாத ரம்யா, திடீரென முட்டாள், என்னிடம் சும்மா கதை விடுகிறாயா... உன்னால் மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய முடியாதா என்று கோபமாக கேட்டார். இதைக் கேட்டு ஹனுமந்தய்யா அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் ரம்யா, ஜில்லா பஞ்சடாயத்து தலைமை செயற்பொறியாளர் ஜெயண்ணாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 வாரத்திற்குள் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விட்டுக் கிளம்பிச் சென்றார்.

உதவி செயற்பொறியாளரை முட்டாள் என்று மக்கள் மத்தியில் ரம்யா திட்டியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X