»   »  ஐஸ்வர்யா ராய் வீட்டில் எரியும் நெருப்பில் லிட்டர் லிட்டராய் எண்ணெய் ஊற்றும் இயக்குனர்

ஐஸ்வர்யா ராய் வீட்டில் எரியும் நெருப்பில் லிட்டர் லிட்டராய் எண்ணெய் ஊற்றும் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கரண் ஜோஹார் ஏ தில் ஹை முஷ்கிலின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தாலும் பச்சன் குடும்பத்தாரின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளாராம்.

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள முக்கோண காதல் கதை ஏ தில் ஹை முஷ்கில்.

கரண் கோஹாரின் அக்மார்க் எமோஷனல் படமாக வந்துள்ளது.

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் ட்ரெய்லர் கடந்த 23ம் தேதி வெளியானது. ட்ரெய்லர் பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ட்ரெய்லரை வெளியிட்ட 2 மணிநேரத்தில் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

புதிய புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மடியில் ரன்பிர் கபூர் படுத்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ரன்பிருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது அவரது கணவர் வீட்டாருக்கு பிடிக்கவில்லையாம்.

அந்த காட்சி

அந்த காட்சி

படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிரும் ஒருவர் உடம்பில் உள்ள சாக்லேட்டை மற்றொருவர் நாக்கால் எடுக்கும் காட்சியை நீக்குமாறு அமிதாப் கரண் ஜோஹாரிடம் தெரிவித்தும் அவர் கேட்கவில்லையாம். இதனால் பச்சன் குடும்பத்தார் கோபத்தில் உள்ளார்களாம்.

ரன்பிர்

ரன்பிர்

ரன்பிரும், ஐஸ்வர்யாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களால் பச்சன் குடும்பத்தார் மேலும் கடுப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏ தில் ஹை முஷ்கில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.

English summary
The team of Ae Dil Hai Mushkil released new stills of Aishwarya Rai Bachchan and Ranbir Kapoor and they are looking damn romantic.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil